இலை மடக்குப் புழு மேலாண்மை முறைகள்!

நெற்பயிரை தாக்கும் புழுக்களில் இலை மடக்குப் புழு ஒன்று. இதனாலும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு மகசூல் குறைய வாய்ப்புள்ளது .அத்தகைய இழப்பு மற்றும் அதன் மேலாண்மை முறை பற்றி இங்கு காணலாம்.

இப்புழுக்கள் மழைக்குப் பிறகு தழைச்சத்து உரங்களை அதிகமாக இட்டால் தோன்றும். நிழலான பகுதிகளில் தாக்குதல் அதிகமாக காணப்படும். தாய் அந்துப் பூச்சிகள் இடுகின்ற முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளை நீளவாக்கில் மடித்து பச்சையத்தை சுரண்டி உண்ணும். இதனால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும் .

தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும் .மேலும் பயிரின் ஒளிச்சேர்க்கை குறைந்த வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகள் நீளவாக்கில் சுரூட்டி புழுக்கள் அதனுள்ளே தங்கிவிடும்.

முறையான பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் .பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே உரம் இடவேண்டும். இலை மடக்குப் போலவே அந்துப்பூச்சிகள் இரவு நேரத்தில் வெளிச்சத்திற்கு ஈர்க்கப்படுகிறது.எனவே முன்னிரவு நேரங்களில் விளக்குப் பொறிகள் கவ ரப்படுகின்ற தாய் பூச்சிகளை அழிக்கலாம்.

தேவைக்கேற்ப தழைச்சத்து இடவேண்டும். இதன் தாக்குதல் அதிகமாக உள்ள இடங்களில் ரசாயன உரங்களை தவிர்த்தால் இதன் சேதத்தை குறைக்கலாம். தழைச்சத்தின் தேவையை தொழு உரம் அல்லது பசுந்தாள் உரம் பூர்த்தி செய்யும். இதை இடுவதன் மூலம் இப்பூச்சியின் பெருக்கம் தவிர்க்கப்படுகிறது.

முட்டை ஒட்டுண்ணியாக டிரைக்கோகிரம்மா ஒரு எக்டருக்கு 5 சிசி என்ற அளவில் பயிர் நடவு செய்த முப்பத்தி ஒன்று, 44 மற்றும் ஐம்பத்தி ஒரு நாட்களில் மொத்தம் மூன்று முறை விட வேண்டும்.மேலும் வேப்பங்கொட்டை சாறு கரைசல் அல்லது வேப்ப எண்ணெய் ஆகியவற்றை தெளிக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories