எலுமிச்சையில் இ லை துளைப்பான் எப்படி கட்டுப்படுத்தலாம்?

ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு தூ ளை 10 முதல் 20 லிட்டர் தண்ணீரில் ஒரு வாரகாலம் ஊறவைத்து அதில் கிடைக்கும் சாற்றை வடித்துக்கொள்ளவேண்டும்.
இந்த வடி சாற்றை எலுமிச்சை மரத்தின் இலைகளின் மீது தெளித்தால் எலுமிச்சையில் இலைத் துளைப்பானைக் கட்டுபடுத்தலாம்.

பாசிப்பயறு விதை நேர்த்தி செய்வது எப்படி?

ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை 300 மில்லி ஆட்டூட்டம் கரைசல் மற்றும் 10 லிட்டர் நீரில் கலந்து 24 மணி நேரம் ஊற வைத்து பின்பு அதனை எடுத்து சில நிமிடம் உலர்த்தி விதைக்க வேண்டும்.

கோடை உழவு செய்வதினால் என்ன பயன்?

கோடை உழவு செய்தால் மண்ணில் சுமார் ஐந்து முதல் பத்து சென்டிமீட்டர் ஆழத்தில் உள்ளகீழ் மண் மேலாகவும் மேல் மண் கீழாகவும் புரட்டப்படுகிறது .

இதனால் மண்ணின் அடியில் உள்ள பூச்சி புழு கூட்டுப்புழு கல் மண்மேல் கொண்டு வர ப டுகிறது. இவை பறவைகளாலும் வெயிலினால் அழி க்கப்படுகின்றன.

கலப்புப் பயிர் எப்படி வளர்க்க வேண்டும்?
கலப்புப் பயிர் வளர்ச்சி பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டில் மிக இன்றியமையாத உரையாகும்.

இப்படிப்பட்ட ஒரே பயிரை வளர்க்காமல் ஊடாக பல்வேறு பயிர்களை இணைத்து வளர்க்க வேண்டும் சோளத் தட்டை பயறு உளுந்து போன்ற பயிர்களை வளர்க்கலாம்.

வயலின் ஓரங்களில் ஆமணக்கை வளர்த்தவள் புரோடீனியா புழுக்களின் தாக்குதலை எளிதாக கண்டறிய முடியும்.
இந்த கலப்பு பயிர்களை எல்லா பயிர்களுக்கும் போதிய வெளிச்சம் கிடைக்கும் வகையில் திட்டமிட்ட உணர்த்த வேண்டும்.

கால்நடைகளுக்கு ஏற்படும் குடற்புழு தாக்கத்தின் அறிகுறிகள் என்ன?

குடற்புழுக்களால் பாதிக்கப்படும் கால்நடைகளின் வயிற்றில்மிகுதியான வீக்கம் ஏற்படும்.

வயிற்றுப்போக்கு உடல்நிலை குறைந்த எந்நேரத்திலும் சோர்ந்து காணப்படும் தாடையின் கீழ் பகுதியில் வீக்கம் காணப்படும்.

வயிற்றுப்போக்கு மற்றும் இரத்த சோகையால் பாதிக்கப் பட்டு பால் உற்பத்தித் திறன் குறையும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories