கத்தரிக்காயில் காய் பிடிக்காமல் பூக்கள் உதிர்ந்து கொட்டுகிறது இதை எப்படி சரி செய்யலாம்?

5 முதல் 15 வருடம் வரை லாபம் தரக்கூடிய மரங்கள் யாவை?

சவுக்கு, மூங்கில் ,யூகலிப்டஸ், எனப்படும் தைல மரம்,குமிழ் மரம் ,மலைவேம்பு மரம் போன்ற மரங்களும் 5 முதல் 15 வருடம் வரை அதிக லாபம் தரக்கூடிய மரங்களாகும்.

திருச்சி 3 நெல் ரகத்திற்கு பருவ காலம் என்ன?

திருச்சி 3 நெல் ரகத்திற்கு பருவகாலம் 135 நாட்கள் ஆகும்.

வாழை மரத்திற்கு என்னென்ன இயற்கை உரம் கொடுக்கலாம்?

சிறு தானியங்களான கம்பு தட்டைப்பயிர் எள்ளு உளுந்து துவரை போன்ற பயிர் வகைகளை கலந்து விதைத்த மூன்று மாதம் ஆன பிறகு அறுவடை செய்து விட்டு எஞ்சியுள்ள செடிகளை வாழைத்தோட்டத்தில் மடித்து இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.

வாழை மரங்களுக்கு கோழி எரு ஆட்டு எரு மாட்டுச்சாணம் உயிரி உரக் கரைசலை சொட்டு நீர் மூலம் கொடுக்கலாம் காய்கள் ,பருமனாக மோர் எருக்கன் இலைச் சாறு மாட்டுச் சாணம் மாட்டு கோமியம் கலந்து தெளிக்கலாம்.

மல்லிகைச் செடியில் செம்பேன் தடுக்க என்ன செய்யலாம்?

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் மற்றும் கற்பூரகரைசல் மாறிமாறி தெளித்து வந்தால் மல்லிகையில் செம்பேன் தாக்குதலை குறைக்கலாம்.

புகையிலை கரைசல் தயாரிக்கும் முறைகளை குறிப்பிடவும்?

150 கிராம் நீர்த்து புகையிலையை எடுத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி வேண்டும்.

பிறகு ஒரு லிட்டர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் என்று நன்றாக கொதிக்கும்போது புகையிலையை தண்ணீரில் போட்டு பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஒரு இரவு அல்லது பத்து மணி நேரம் மூடி வைத்து விட வேண்டும் பிறகு நன்கு கலக்கி வடிகட்ட வேண்டும்.

கிடைக்கக்கூடிய கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து ஒரு ஏக்கர் அளவிற்கு எல்லா வகையான பயர்களில் தெளிக்க வேண்டும்.

கத்தரிக்காயில் காய் பிடிக்காமல் பூக்கள் உதிர்ந்து கொட்டுகிறது இதை எப்படி சரி செய்யலாம்?

தேங்காய் பால் கடலை புண்ணாக்கு செடிகளுக்கு அ ளிப்பதன் மூலம் கத்தரியில் பூக்கள் உதிர்வதை தடுக்க வேண்டும்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories