கத்தரிச்செடியில் பூக்கள் விழுகிறது .பிஞ்சுகள் பூச்சி பிடிக்கிறது என்ன செய்வது?

மீன்அமிலக் கரைசலில் 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். மற்றும் ஜீவாமிர்தக் கரைசல் முறையை மாறி மாறி வாரம் ஒரு முறை தெளித்து வந்தால் பூக்கள் உதிர்வதைத் தடுக்கலாம் கரைசலை பூ பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறைய பூக்கள் பிடிக்கும்.

மண்புழுக்களை அதிகப்படுத்த என்ன செய்வது

மண்புழுக்களை அதிகப்படுத்த வேண்டும் என்றால் நன்கு மக்கிய உரத்தை நிழலில் மண்புழு வளர்ப்பு தொட்டியில் இட்டு மண்புழுக்களை இடைக் காலப் போக்கில் மண்புழுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மண்புழு எப்படி தயாரிப்பது

மண்ணில் அதிகம் ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி இருந்தால் இயற்கையாகவே மண்ணில் மண்புழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மண்புழு உர உற்பத்திக்கான நிலப்பரப்பின் மேல் வாழக்கூடிய மண்புழு மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. ஆப்ரிக்கன் மண்புழு, சிவப்பு மண்புழு, மட்கிய மண்புழு போன்றவற்றை மண்புழு உரத்தின் உற்பத்திக்காக சிறந்த மண்புழுக்கள் ஆகும்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories