விவசாயத்தில் நல்ல விளைச்சலைப் பெற என்ன செய்ய வேண் வேண்டும்?
நோய் பாதிக்கப்படாத தரமான விதைகளை பயன்படுத்தவும். போதுமான பாசன வசதிகளை செய்ய வேண்டும்.
சூடோமோனஸ் ,புளூரசன்ஸ் 2.5 கிலோ ஒரு எக்டர் மண்ணிற்கு இடவேண்டும்.
மஞ்சளில் ஏற்படும் தண்டு அழுகல் இன் அறிகுறிகள் என்ன?
பாதிக்கப்பட்ட தாவரத்தின் தண்டுப் பகுதியில் நீர் கசிந்து மென்மையாக காணப்படும். வேர் அமைப்பு பெருமளவில் குறைந்து காணப்படும்.
இலைகள் சிறிது சிறிதாக காயத் தொடங்கும் .பாதிக்கப்பட்ட வேர் தண்டு மென்மையாக மாறி பிறகு அழுகி பல நிறங்களில் காணப்படும்.
வளமான மண் எப்படி இருக்க வேண்டும்?
நல்ல மண்வளம் இருந்தால் கண்ணுக்குத் தெரியக்கூடிய அளவுக்கு மண்புழுக்கள் இருக்கும்
ஒரு சதுர மீட்டருக்கு 12 முதல் 13 குழுக்கள் இருக்கும். குறைந்தபட்சம் 8 முதல் 10 புழுக்கள் இருந்தால் அவை வளமான மண்ணாக கருதப்படுகிறது.
கத்தரிச் செடியின் இலை சுருட்டு காணப்படுகிறது என்ன செய்யலாம்?
100 லிட்டர் நீரில் 3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் கோமியம் ,கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் இலை பூக்கள் தாக்கம் குறையும். இதனால் இலைகள் சுருள்வதை குறைக்கலாம்.
அதிக பால் கொடுக்கும் கறவை மாடுகள் அடிக்கடி மடி நோயினால் பாதிக்கப் படுவது ஏன்?
அதிக பால் உற்பத்தி செய்யும் கரவை மாடுகள்எரி சக்தியை குறைவினால் நோய் எதிர்ப்பு சக்தியால் பாதிக்கப்படுகின்றது. இதனால் மடி நோயின் தாக்கம் அடிக்கடி காணப்படுகிறது.