கத்திரிக்காயில் பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது என்ன செய்வது

கத்தரிக்காயில் பூச்சி தாக்கினால் நான்கு நாட்கள் புளித்த 2 லிட்டர் மோரில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்தால் இலைப்பேன் கொட்டிவிடும் .இதன் பயனாக செடியில் பல புதிய துளிகளும் வரும்.

கத்திரி செடியில் இயற்கை பூச்சி விரட்டி அளிக்கப்பட்டுள்ளது இரண்டு நாட்களுக்கு பிறகு மீன் அமிலம் தெளிக்கலாம?

உடனே தெளிக்க கூடாது .குறைந்தது ஒரு வாரம் இடைவெளி விட்டுத்தான் அடுத்த கரைசலை தெளிக்க வேண்டும்.

நெல் 38 நடவு போட்டதிலிருந்து அறுவடைக்கு வரை எத்தனை நாட்கள் ஆகும்.

130 முதல் 135 நாட்களில் அறுவடைக்கு வரும்.

ஆவணி மாதம் என்ன வாழை நடவு போடலாம்.

பூவன், G9 ,செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், ஏலக்கி, தேன் கதலி போன்ற ரகங்களில் உங்கள் மண்ணுக்கு ஏற்ற ரகங்களை நடவு செய்யலாம்.

நாட்டு அத்திப்பழம் எப்பொழுது பறிக்க வேண்டும். பழம்ஆகிவிட்டதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

பழத்தின் முதிர்ந்த நிலை எளிதாக அறியலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories