கத்திரியில் கூன் வண்டு மேலாண்மை

கத்திரியில் கூன் வண்டு மேலாண்மை

சாம்பல் கூன் வண்டு

கோடை காலத்தில் சாம்பல் கூன் வண்டின் புழுக்கள், பயிரின் வேர் பகுதியைத் தாக்கியும், இலைகளைக் கடித்தும் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தும். இதனால், மகசூல் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது. சாம்பல் கூன் வண்டின் புழுக்கள் வேர்களைக் கடித்துச் சேதப்படுத்துவதால் செடியானது விரைவில் காய்ந்துவிடும். அத்துடன் அதிக அளவில் பூச்சி மருந்துகளைத் தெளிப்பதன் மூலமும் ஒரு சில புழுக்கள், வண்டுகள் அதிக எதிர்ப்புத் திறன் பெற்று விடுகின்றன.

பூச்சியின் தன்மை

கூன் வண்டு புழுக்கள் சிறியதாகவும், கால்கள் அற்றும் காணப்படும். கூன் வண்டானது செடியின் அடிப்பகுதியில் 500-க்கும் அதிகமான முட்டைகளை இடும். ஒரு வாரத்தில் முட்டையிலிருந்து வெளி வரும் புழுக்கள் செடியின் வேர்பகுதிகளைச் சேதப்படுத்தும். இந்தப் புழுக்கள் 60 முதல் 75 நாள்களில் கூட்டுப் புழுக்களாக மாறி 10 முதல் 12 நாள்களில் கூன் வண்டாக வெளிவரும். சிற்றினத்துக்கு ஏற்ப இந்த வண்டின் நிறம் பழுப்பு நிறமாகவே காணப்படும்.

கூன் வண்டின் மேலாண்மை

கூன் வண்டுகளை அழிப்பதால், புழுக்களின் தாக்கம் பயிர்களுக்கு வெகுவாகக் குறைகின்றன. கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 500 கிலோ வேப்பம் புண்ணாக்கினைச் சேர்த்து உழவு செய்ய வேண்டும். மேலும், நன்மை செய்யும் நூற்புழுக்களை ஹெக்டேருக்கு 8 கிலோ வீதம் நிலத்தில் இட வேண்டும். நன்மை செய்யும் நூற்புழுக்களை (இ.பி.எண்) 8 கிலோவை, 50-100 கிலோ கிராம் ஈரம் செய்யப்பட்ட தென்னை நார் துகள்களுடன் கலக்க வேண்டும். பின்னர், இவற்றை கைப்பிடி அளவு எடுத்து ஒவ்வொரு செடியிலும் நடவு செய்த 45 நாள்களில் வேர் பகுதிகளில் இட வேண்டும்.

நூற்புழுக்கள் இயற்கை வேளாண்மைக்கு ஊக்கியாக இருக்கும். கூன் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தும். தனியார் விற்பனை மையங்களில் இந்த நூற்புழுக்கள் விற்பனைக்கு உள்ளன.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories