கருவேப்பிலை பூச்சி மேலாண்மை

செதில் பூச்சி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள்

இதனை கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி வேப்ப எண்ணெய் மற்றும் 100 கிராம் காதி சோப்பு கரைசல் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைப்புள்ளி நோய்

இதனை கட்டுப்படுத்த சோற்றுக்கற்றாழை 3.5 கிலோ இஞ்சி 100 கிராம்இவற்றுடன் புதினா அல்லது சவுக்கை இலை 2 கிலோ சேர்த்து மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி வேக வைக்கவேண்டும் .ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள் தூள் ஒரு பிடி கலந்து சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் அல்லது ஒரு கிலோ கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மகசூல்

முதல் வருடம் ஒரு ஹெக்ட்டரிலிருந்து 250 முதல் 400 கிலோ தழை கிடைக்கும்.

இரண்டாம் வருடம் நான்கு மாதத்திற்கு ஒரு முறை 1800 கிலோ தழை வரை கிடைக்கும்.

மூன்றாம் வருடம் ஒரு ஹெக்டருக்கு 5 ஆயிரத்து 400 கிலோ தழை கிடைக்கும்.

நான்காம் வருடம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு ஹெக்டருக்கு 2,500 கிலோ தழை கிடைக்கும்.

ஐந்தாம் வருடம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு ஹெக்டருக்கு 5000 கிலோ தழைகிடைக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories