காலிபிளவரில் புழு மற்றும் வண்டு தாக்குதல் உள்ளது. அதற்கு என்ன செய்ய வேண்டும்?
வாரம் ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம் .இதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
தாய் அந்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த காலையிலிருந்து இரவு வரை விளக்குப்பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம்.
1o வெள்ளாடுகளுக்கு (கிடா மூன்று வேளையும் பசுந்தீவனம் மட்டும் கொடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு பரப்பில் பயிரிட வேண்டும்?
கால் ஏக்கரில் இருந்து அரை ஏக்கர் வரை தேவைப்படும் .இவற்றிலும் ஒரே வகை தீவனங்களை பயிரிடாமல் அனைத்து பசுந்தீவனங்கள் கலையும் கலந்து பயிரிடலாம்.
தென்னந்தோப்பில் பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்தவும் செம்மறி ஆடுகளை பயன்படுத்தலாமா?
ஆடு மாடுகளுக்கு பார்த்தீனியம் கொடுக்கக் கூடாது .அதிலும் கால்நடைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
ஒரு ஏக்கரில் 50 வெளிநாடுகளுக்கு என்னென்ன தீவனங்களை எவ்வளவு இடத்தில் வளர்க்கலாம்?
25 சென்ட் நிலத்தில் வேலிமசால் குதிரை மசால் வகைகள் மற்றும் 50 சென்ட் நிலத்தில் புல் வகை தீவனங்களை கலந்து பெயரிடலாம். 25 சென்ட் நிலத்தில் பயறுவகை தீவனங்களை பயிரிடலாம் .மரத்தை சுற்றிலும் மரவகை தீவனங்க ளான அகத்தி சவுண்டல் பயிரிடலாம்.
நிலக்கடலையில் பூ வைப்பதற்கு முன்பு களை எடுக்கும் போது என்ன உரம் இடவேண்டும்?
தொழு உரத்துடன் ஜீவாமிர்தம் கலந்து ஒவ்வொரு செடிக்கும் ஒரு கைப்பிடி அளவு கலவையை களை எடுத்து மண் அணைக்கும் சமயத்தில் இடவேண்டும்.