கீரைகளில் வெட்டுக்கிளி மற்றும் பூச்சிக் மேலாண்மை!

சாப்பிட ஆயிரம் உணவு வகைகள் இருந்தாலும், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளைத் தேடிச் சென்று தினம் தின்று வாழ்ந்தால், எந்த நோயாலும் நம்மைப் பதம்பார்க்க இயலாது. மருத்துவமனைக்கும் போகத்தேவையில்லை. பல லட்சம் ரூபாயை செலவு செய்யவும் தேவையில்லை என்றார்.

கீரை என்று சொன்னாலே அதன் முக்கியப் பயன்பாடே அவற்றின் பச்சை பசேல் இலைகள்தான்.

அந்த இலைகள் ஓட்டைகள் இல்லாமல் எந்த ஒரு பூச்சி தாக்குதலும் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் வியாபாரிகளை வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் (Disease and pest attack)
எனவே நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் இன்றி கீரையை சாகுபடி செய்து, விற்பனை செய்ய நாம் கடைப்பிடிக்க வேண்டியது என்ன என்பதை இப்போது காண்போம்.
வெட்டுக்கிளி (Locust)
கீரையின் இலைகளில் ஓட்டை விழுவதற்கு முக்கிய கரணம் பல்வேறு வகையான வெட்டுக்கிளிகள்.

அதை வரவிடாமல் தடுக்க வேண்டியது நம்முடைய முதல் இலக்கு. அடுத்தது சாதாரண பூச்சிகள் தாக்குதல்.

இதைக் கட்டுப்படுத்துவதுதான் 2-வது இலக்கு. இருக்கும்.கடைசியில் தேவையான இடுபொருட்கள் கொடுப்பது. இந்த மூன்றும்தான் அடிப்படை.

சரியான இடுபொருட்கள் கொடுப்பதால் ஒரே மாதிரி உயரம் மற்றும் அளவுக்கு கீரையை வளர்த்தெடுக்க முடியும்.
அப்படி செய்வதற்கு தரை அதிகமான நைட்ரஜன் சத்துக்களோடும் மற்றும் சாம்பல் சத்து தேவை. அது இருந்தால் பொதுவான வளர்ச்சி நன்றாக இருக்கும்.

இயற்கை மருந்து (Natural medicine)
கீரைகளில் ஓட்டை வெட்டுகிளிகளாலும் பறக்க கூடிய பூச்சிகளாலும் வரக்கூடியது என்பதால், இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் பயன்படுத்துவது நல்ல பலன் தரும்.
இதில் இரண்டு நன்மைகள் உள்ளன. இந்தக்கரைசலில் உள்ள காட்டத்தன்மை பூச்சிகளை அண்டவிடாது. மறுநாளைக்கே விற்பனை செய்யவேண்டும் என்றாலும்கூட, கீரையில், கரைசலின் தாக்கம் அறவே இருக்காது என்றார்.

இதேபோல, கற்பூரக்கரைசல் கூட கொடுக்கலாம் . சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்பட்டால் வெர்டிசீலியம் லக்கானி 10 லிட்டருக்கு 50 மில்லி தெளிக்கலாம் என்றார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories