சப்போட்டாவில் இலைப்பேன் கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகள் யாவை?

சப்போட்டாவில் இலைப்பேன் கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு மற்றும் சோற்றுக்கற்றாழை ஆகிய இரண்டையும் நன்கு இடித்து தூளாக்கி அதை 10 நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து தெளிக்கலாம்.

ஜாதிக்காய் நடவு செய்ய ஏற்ற பருவம் எது ?

ஜாதிக்காய் நடவு செய்ய மிதமான சீதோஷண நிலை தேவை. ஆனால் அதிக பனி கொட்டும் பகுதியில்வளராது. ஈரக் காற்று வீசும் பகுதிகளில் வளரும் தன்மை கொண்டது.

மேலும் அனைத்து மாதத்திலும் நடவு செய்யலாம் மேலும் கார்த்திகை மாதம் நடவு செய்ய சிறப்பானது.

புடலங்காயில் இலை சுருட்டுப்புழு தாகத்தை கட்டுப்படுத்தும் முறைகள் யாவை?

புடலங்காயில் இலை சுருட்டுப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் தெளிக்கலாம்.

ஏழு நாட்களுக்கு ஒரு முறை அக்னி அஸ்திரம் தெளிப்பதன் மூலம் புடலங்காய் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

தீவனம் மட்டும் பசுந்தீவனம் அளிக்கும்போது தீவனம் வீணாகாமல் பாதுகாப்பது எப்படி?

தீவனங்களையும் குருனைளாகவும் சிறு உருண்டைகளாக மாற்றி அளிக்க வேண்டும் தவிடு போன்ற உணவுகளை அளி க்கும் போது சிறிது தண்ணீர் தெளித்து அளிப்பதன் மூலம் தீவனம் வீணாவதை தவிர்க்கலாம்.

தீவினை புற்களை சிறு துண்டுகளாக நறுக்கி அளிப்பதன்மூலம் தீவனம் விரயமாவது குறைக்கலாம்.

ஆடுகளுக்கு உயரப் பகுதியில் வைத்து அளிப்பதன் மூலம் தீவனம் வீணாவது தவிர்க்கப்படுகிறது.

கோமாரி நோய்க்கான தடுப்பூசி அட்டவணை என்ன?

முதல் தடுப்பூசி நாலு மாதம் வயதிற்கு மேல் உள்ள கன்றுகளுக்கு தடுப்பு ஊசி 2-லிருந்து நான்கு வாரங்களுக்குப் பின் அதன் பின்னர் ஒவ்வொரு 4 முதல் 6 மாத இடைவெளிக்கு ஒரு தடுப்பூசி போட வேண்டும்

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories