வேர் புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த 50 கிலோ வேப்பம் புண்ணாக்கை கடைசி உழவிற்கு முன்பு வயலில் இட்டு உழவு செய்யவேண்டும்.
நடவிற்கு பிறகு செடிக்கும் 500 கிராம் வேப்பம் புண்ணாக்கு இடலாம்.
பீர்க்கங்காய் செடிக்கு என்ன வளர்ச்சி ஊக்கி கொடுக்கலாம்?
மாட்டு கோமியத்தில் ஒரு கிலோ பசுஞ்சாணம் உரலில் இடித்து ஒரு கிலோ வேப்பிலை ஆகியவற்றை கலந்து 48 மணி நேரம் ஊறவைத்து பிறகு அதை வடிகட்டி பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் மீது மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் பூச்சி விரட்டியாக செயல்படும்.
மக்காச்சோளத்தில் படைபுழு தாக்குதல் வருவதற்கு முன் எப்படி தடுக்க வேண்டும்.?
உழவு செய்யும்போது ஏக்கருக்கு 7oo கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு உழவு செய்ய வேண்டும்.
மக்காச்சோளம் பயிரிடும் 15 நாட்களிலிருந்து 60 நாட்களுக்குள் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டைச் சாறு நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நெல் நடவிற்கு முன்பு என்ன உரம் இடலாம்?
நெல் நடவு வயலில் கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இடவேண்டும்.
சூடோமோனாஸ் என்ற உயிரியல் பூஞ்சானக் கொல்லியை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயலில் நெல் நடவிற்கு முன்பாக இடவேண்டும்.
அசோலாவில் உள்ள சத்துப் பொருள்கள் யாவை?
அசோலாவில் அதிக அளவு புரதச் சத்து மற்றும் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்கள் விட்டமின் ஏ, விட்டமின் பி 12 ,தாதுப்பொருட்களான கால்சியம் , பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் ஆகிய ஆகியவை அடங்கியுள்ளன.
மேலும் அசோலாவில் 90% நீர்ச்சத்து, 25-3o சதவீதம் புரதச்சத்தும் 15 முதல் 16 சதவீதம் நார்ச்சத்தும் உள்ளது.