தேமல் நோயானது நச்சுயிரி மூலமாக வரக்கூடிய ஒன்றாகும் சூரியகாந்தியில் பழுப்புநிற தேமல் நோயை உண்டாக்கும் இந்த நச்சுயிரி தவிர சாற்றின் மூலமாகவும் அஸ்வினி பூச்சியின் மூலமாகவும் பரவுகிறது.
இந்த நோயால் செடிகளின் வளர்ச்சி குன்றி இலைகள் சுருங்கியும் வட்ட வடிவில் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
பாசுமதி நெல்லை எப்பொழுது சாகுபடி செய்வது?
பாசுமதி ரக நெல்லை சொர்ணவாரி சம்பா பட்டத்தில் மார்கழி தை அல்லது ஆவணி புரட்டாசி பயிர் செய்யலாம் இது 130 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய பயிராகும்.
இந்த நிலையை ஒரு ஏக்கருக்கு நாற்று உற்பத்தி செய்ய 35 சென்ட் நிலத்திற்கு 2 கிலோ விதை தேவைப்படும் விதைத்தல் 15-ம் நாளில் நாற்று நடவிற்கு தயாராகிவிடும்.
நித்தியகல்யாணி செடியை மூலிகை பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம்?
நித்தியகல்யாணி செடி மருத்துவ குணம் அதிகம் உள்ளது மூலிகை பூச்சிவிரட்டி பயன்படுத்தலாம் ஆடுமாடுகள் சாப்பிட அனைத்து செடிகளையும் பூச்சி விரட்டி தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
நெல் பயிரில் உளுந்து பயிறு ஏன் வரப்பு பயிராக பயிரிட வேண்டும்?
நெல் வயலில் உளுந்து பயிரை வரப்பு பயிராக பயிரிடும் போது நெல் பயிரை தாக்கும் புகையான் முட்டைகள் இலை சுருட்டுப் புழுவின் முட்டைகள் மற்றும் இளம் புழுக்களை உளுந்து பயிறு கவரப்பட்ட நன்மை செய்யும் பூச்சிகளை அழித்து விடும்.
கன்று ஈனும் மாடு எப்பொழுது மடி விடும்?
பொதுவாக கிடேரிகள் சினையான நான்காம் அல்லது ஐந்தாம் மாதத்தில் இருந்து மடி விட ஆரம்பித்து விடும்.
ஆனால் ஏற்கனவே கன்று ஈனுவதற்கு ஒரு வாரம் முன்னதாக மடி விட ஆரம்பிக்கும் கன்று ஈனுவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக பாலானது சீம்பால் ஆகும் மாற்றமடையும்.