செம்மை கரும்பு சாகுபடி என்றால் என்ன?
2-3 அரும்புகள் கொண்ட கரணைகளை பயன்படுத்தி நாற்றங்கால் அமைக்கும் முறையே செம்மை கரும்பு சாகுபடி ஆகும்.
25-35 நாட்களான இளம் கரணைகளை நடவு செய்வதால் மரபுவழி சாகுபடியை விட இம் முறையில் பயிர் இறப்பு விகிதம் சற்று குறைவாக உள்ளது.
வயலின் நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்க செய்யவும், தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கவும் ஏதாவது வழி உள்ளதா?
நன்மை செய்யும் பூச்சிகளை பெறுவதற்கு தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது தீர்வாக அமையும்.
பயிர்களின் இலைகளில் கசப்பு தன்மை உருவாக்கலாம். இதற்கு கசப்புத் தன்மையுள்ள இயற்கை கரைசலை பயிர்களில் தெளிக்கலாம். இதனால் பூச்சிகள் பயிர்கலின் இலைகளை சேதப்படுத்தாது.
மேலும் ஊடுபயிர் மூலமாகவும் எந்த தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் அதாவது ஆமணக்கு போன்ற செடிகளை வரப்புகளில் நட்டு வைப்பதன் மூலம் தீமை செய்யும் பூச்சிகளை வயலுக்குள் வரவிடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
தேனீ வளர்ப்பு மூலம் விவசாயிகளுக்கு உள்ள நன்மைகள் என்ன?
விவசாயிகளின் பண்ணை சார்ந்த தொழில்களில் நேரடியாக பலன் தரும் தொழில் தான் தேனீர் வளர்ப்பு ஆகும். பண்ணையில் தேன் வளர்ப்பதன் மூலமாக அந்தப் பகுதியில் உள்ள பூக்களில் மகரந்தச் சேர்க்கை அதிகம் நடைபெறும்.
தேனீ வளர்க்க ஆரம்பித்து மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து நம்மால் ஒரு முறை தேன் எடுக்க முடியும் .ஒவ்வொரு முறையும் தேன் எடுக்கும் போது சுமார் 4 கிலோ வரை தேன் கிடைக்கும்.
விதை பந்துகளை எப்பொழுது வீச வேண்டும்?
விதைப்பந்துகளை சூழலுக்கு ஏற்ற மரங்கள் விதைப்புக் ஆன இடம் ஆகியவை சரியாக இருந்தால் மட்டுமே வீச வேண்டும்.
வீசப்படும் விதை களுக்கு தண்ணீர் விடுவது இயலாது என்பதால் மழைக்காலங்களில் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் மாதங்களில் விதைகளை வீசினால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் ஈரப்பதமுள்ள மண்ணில் தான் விதைகள் நன்கு முளைக்க்கும்.
கால்நடைகளின் வாய்க்கானைக்கு என்ன சிகிச்சை செய்யலாம்?
வாய்க்காகானைக்கு வரிக்குமட்டி சாறு 100 மில்லி, சோற்றுக்கற்றாழை சாறு 100 மில்லி, ஆடு தின்னாப் பாளைச் சாறு 100 மில்லி, வேப்ப எண்ணெய் 5o மில்லி ஆகிய இவற்றை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு 50 கிராம் கருப்பட்டியை முதலில் உண்ண கொடுத்து விட்டு 15 நிமிடம் கழித்து மருந்து கலவையை கொடுக்க குணமாகும்.