தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி, நிறப்பொறிகள் வைப்பதன் அவசியம்
பொதுவாக அனைத்துவகை பயிர்களிலும் தீமைசெய்யும் பூச்சிகளின் தாக்குதல் இருக்கும் தீமைசெய்யும் பூச்சிகள் அதிகளவில் பயிர்களை சேதப்படுத்தும். விவசாயிகளுக்கு இவற்றின் மூலம் அதிக சேதம் ஏற்படும்.
ஒரு பூச்சி சுமார் 1000 முதல் 1500 முட்டைகளை இலை, பூ மொட்டுகள், பிஞ்சு காய், மற்றும் பழம் இவற்றில்முட்டைகளை இடும்.
இவை தாக்கிய காய்கள் அல்லது பழங்கள் கருப்பாகி சீக்கிரமே அழுகி சாப்பிட முடியாமல் இரண்டு நாட்களிலேயே கீழே விழுந்துவிடும். இதனால் மகசூல் குறைந்து விவசாயம் நஷ்டமாகிவிட வாய்ப்பள்ளது.