காண்டாமிருக வண்டு தென்னை மர உச்சியில் தென்னை மட்டை களுக்கு இடையே குருத்து இலைகளை குடைந்து சேதம் செய்யும்.
இவ்வாறு வண்டு போகும் துலைகளால் குருத்து இலை விரிந்து பிறகு வரிசையாக காணப்படும். விசிறி போன்ற வடிவில் இலைகள் வெட்டப்பட்டு இருக்கும்.
தென்னம் பாலைகளும் துளைக்கப்பட்டு குருத்து காய்ந்து விடும் .தாக்கப்பட்ட மரம் பலமிழந்து வளர்ச்சி குன்றி காணப்படும்.
வாழையில் வாடல் நோய் தாக்குதலின் அறிகுறி என்ன?
வாழையில் வாடல் நோய் தாக்கப்பட்ட மரங்களின் அடி இலைகள் திடீரென பழுத்தும் தண்டுடன் சேரும் இடத்திலும் ஓடி ந்தும் மடிந்தும் வாழைத்தண்டை சுற்றிலும் துணிகட்டியது அது போல காட்சியளிக்கும்.
பிறகு தண்டின் அடிப்பாகத்தில் மண்ணிலிருந்து மேல் நோக்கியே நீள வாக்கில் வெடிப்பு ஏற்படும். கிழங்கினை குறுக்கே வெட்டிப் பார்த்தால் செம்பழுப்பு நிறத்தில் வட்டவட்டமாக பூஞ்சணம் தாக்கி இருப்பதை காணலாம்.
அவரையில்வரையில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
நிறைய பூச்சித்தாக்குதல் செடி அவரை இல் தான் வரும். அஸ்வினி போன்று சாறு உறிஞ்சும் பூச்சிகள் கூட்டமாக செடியின் தலையில் பூக்களிலிருந்து சாற்றை உறிஞ்சி செடியை வாடி போக வைத்துவிடும்.
இதைத் தவிர காய்த் துளைப்பான் பூச்சிகள் தொந்தரவும் இருக்கும் .இவைகள் காய்யில் துளை போட்டு அவரை விதையை சாப்பிடும்.
செண்டுமல்லி நாற்றுக்களை உற்பத்தி செய்வது?
செண்டுமல்லி நாற்று உற்பத்தியில் 10 அடிக்கு 8 அடி பாத்தி அமைத்து அதில் 3 அங்குல இடைவெளியில் வரிசையாக குச்சி மூலமாக கோடு போட்டு விதையைத் தூவி லேசாக மண் போட்டு மூட வேண்டும் .விதை தூவிய நான்காம் நாள் முளைப்பு தெரியும்.
18 முதல் 22 நாட்களுக்கும் நாற்றைப் பறித்து நிலத்தில் நடவு செய்யவேண்டும் .22 நாட்களுக்கு மேல் ஆகி விட்டால் பூக்கும் பருவத்திற்கு வந்துவிடும். அதன்பிறகு செடியில் நடவிற்கு ஏற்றதல்ல.
ஆடுகளுக்கான அடர் தீவன செலவை எப்படி குறைக்கலாம்?
ஆடுகளுக்கு பசுந்தீவனம் அளிப்பதன் மூலம் தீவனத்தில் செலவை குறைத்து உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்யலாம் .மர இலைகளில் மற்ற தீவனங்களை காட்டிலும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது
எனவே மர வகை தீவனப் பயிர்களை வளர்த்து ஆடுகளுக்கு உணவாகக் கொடுக்கலாம் .இவ் வகைத் தீவனப் பயிர்களில் அதிக புரதச்சத்தும் தாது உப்புகளும் உள்ளது.