தென்னையை காண்டாமிருக வண்டு,இதனை கட்டுப்படுத்தலாம்.

தென்னையை காண்டாமிருக வண்டு,

கற்பக விருட்சம் என்றழைக்கப்படும் பல்லாண்டுப் பயிரான தென்னையைத் தாக்கும் பூச்சிகள், அதன் கட்டுப்பாட்டு முறைகளை விவசாயிகள் தெரிந்து கொண்டால் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்:தென்னையை காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன் வண்டு, ஈரியோபைட் சிலந்திப் பூச்சிகள் தாக்குகின்றன. காண்டாமிருக வண்டு இளம், வளரும் கன்றுகளைத் தாக்கும். விரியாத மட்டைகள், குருத்துப்பகுதி, அடிமட்டைகள், விரியாத பாளைகள் ஆகியவற்றில் சேதம் ஏற்படுத்தும்.தாக்கப்பட்ட இலைகளின் குருத்துகள் விரிந்தவுடன் முக்கோண வடிவில் வெட்டியது போன்றும், பாதிக்கப்பட்ட மரங்களின் குருத்துகள் வளைந்தும், சுருண்டும் காணப்படும். இந்த வகை வண்டுகள் சராசரியாக 10 சதம் வரை சேதம் ஏற்படுத்தும்
.இவ்வண்டு விரியாத குருத்து, மலராத பாளை முதலியவற்றை கடித்து உண்ணும். இதைக் கட்டுப்படுத்த எருக் குழிகளில் பச்சை மஸ்கார்டினே பூசணத்தை இட்டு, இளம் புழுக்களை அழிக்கலாம். பாதிக்கப்பட்ட மரத்தில் உள்ள வண்டு துளைத்த ஓட்டை வழியாக இரும்புக் கம்பியை செலுத்தி வண்டை எடுக்க வேண்டும். மரத்தில் உள்ள துளைகளில் 1-2 செல்பாஸ் மாத்திரைகளை இட்டு களி மண்ணினால் மூடி விட வேண்டும். மட்டைகளின் அடி பாகத்தின் 45 நாட்கள் இடைவெளியில் 2 நாப்தலின் உருண்டைகளை வைத்து மண்ணால் மூடி இதனை கட்டுப்படுத்தலாம்.


: எருக்குழியில் காணப்படும் கூட்டுப்புழு, வண்டுகள் போன்றவற்றை பொறுக்கி அழிப்பதுடன், கார்பரில் 2 கிராம் நனையும் தூளை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை எருக்குழியில் தெளிப்பதுடன், வளர்ந்து வரும் புழுக்களை அழிக்க பச்சை மஸ்கார்டின் என்ற பூஞ்சாணத்தை ஊற்றி அழிக்கலாம்.மேலும், கவர்ச்சிப் பொறிகளை 2 ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைப்பதன் மூலம் ஆண், பெண் வண்டுகளை கவர்ந்து அழிக்க முடியும்.சிவப்புக் கூன் வண்டு: இந்த வகை வண்டுகளின் தாக்குதலை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க இயலாது. வண்டுகள் குருத்துப் பகுதிகளில் முட்டையிட்டு நேரடியாக குருத்தினுள் சென்று திசுக்களை உண்பதால் நடுக்குருத்து வாடி, பின்னர் அனைத்து மட்டைகளும் சரிந்து விடுகின்றன.சில நேரங்களில் தண்டுப் பகுதியில் ஏற்படும் காயங்களின் மூலம் உள்சென்று திசுக்களை உண்டு, சிறிய துவாரம் வழியாக வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் மிகுந்த துர்நாற்றத்தை உண்டாக்கும்.தாக்குதலைக் கட்டுப்படுத்த…: மரக்காயங்களில் முட்டையிடுவதால், காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இடிதாக்கிய மரங்கள், கூன் வண்டு தாக்கிய மரங்கள் இந்த வகை வண்டுகளுக்கு வாழ்விடமாக அமைவதால் அந்த மரங்களை அப்புறப்படுத்திவிட வேண்டும்.கோடை மற்றும் மழைக்காலங்களில் அந்தி நேரங்களில் விளக்கு பொறிகளை தோப்புக்குள் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories