தென்னை மரங்களில் மஞ்சள் நிற ஒட்டுப்பொறி கட்ட வேண்டுமா!

கோவை மாவட்டம் நெகமம் கிணத்துக்கடவு பகுதியில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்துள்ளனர்.தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் மகசூல் குறைந்து விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதனை தொடர்ந்து வெள்ளை ஈக்கள் பரவலை தடுக்க விவசாயிகளுக்கு மஞ்சள் ஒட்டுப்பொறி வழங்கப்பட்டது.தென்னை மரங்களில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் தாள் கட்டி அதில் விளக்கெண்ணெய் தடவி வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு 20 இடங்களில் மஞ்சள் ஒட்டுப்பொறியை வைத்தால் இரவு 7 மணி முதல் 9 மணிக்குள் தோப்புகளில் பறக்கும் வெள்ளை ஈக்கள் ஒட்டுபொறியில் சிக்கி இறந்து விடும் என வேளாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்படுவதும், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நவரைப்பட்ட நெற்பயிர் சாகுபடி செய்யப்படுவதும் வழக்கம். அதன்படி சீனிவாசபுரம்,காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி மதநூற்,அருள்மொழி,ஆகிய பகுதிகளில் நவரை பட்டத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாற்று பறித்து நடவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories