நுண்ணுயிர் சார்ந்த பூச்சிக்கட்டுப்பாடு

நுண்ணுயிர் சார்ந்த பூச்சிக்கட்டுப்பாடு – சிறு தொகுப்பு (Bio Control Agents)
1. வண்டினங்களை அதன் புழுப்பருவத்திலேயே அழிக்க: மெட்டாரைசியம் அனிசோபிலியே (Metarhizium Anisopliae) பூஞ்சானம்
2. வெர்ட்டிசீலியம் லெக்கானி (Verticillium Lecanii): – சாறு உறிஞ்சும் பூச்சிகள், மெல்லிய தோல் கொண்ட பூச்சியின கட்டுப்பாட்டிற்கு.
3. பெவேரியா பேசியானா (Beauveria Bassiana): – தடித்த தோல் கொண்ட பூச்சியின கட்டுப்பாட்டிற்கு. (இலைப்புழு, காய்ப்புழு போன்றவை)
வெர்ட்டிசீலியம் லெக்கானி (Verticillium Lecanii): இந்தப் பூஞ்சணம் வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, செதில்பூச்சி, தத்துப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. காய்கறிகள், பூக்கள், பப்பாளி போன்ற பயிர்களில் இதைப் பயன்படுத்தலாம்.
ஏக்கருக்கு ஒரு கிலோ வெர்ட்டிசீலியம் பூஞ்சணத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். சொட்டுநீர்ப் பாசனம் மூலமாகக் கொடுக்க நினைப்பவர்கள், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து கொடுக்கலாம். சொட்டுநீரில் கொடுக்கும்போது கரைசலை நன்றாகக் கரைத்து, வடிகட்டிக் கொடுக்க வேண்டும்.
மெட்டாரைசியம் அனிசோபிலியே (Metarhizium Anisopliae): இது, வண்டுகளை அழிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. பச்சைப் பூஞ்சணம் எனவும் அழைக்கப்படுகிற இது, தண்டுத்துளைப்பான், வைரமுதுகுப்பூச்சி, காண்டாமிருக வண்டு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். மாட்டுப்பண்ணை, கோழிப்பண்ணைகளில் உள்ள ஈக்களைக் கட்டுப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம். வேர்ப் பூச்சிகள், தத்துப்பூச்சிகள், கருவண்டு, வெள்ளை ஈக்கள்; கொடிவகைப் பயிர்களைத் தாக்கும் வண்டுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பணியையும் செய்கிறது.
இதன் மூலம் காண்டாமிருக வண்டை, அதன் புழுப்பருவத்திலேயே கட்டுப்படுத்தலாம்.
எருக்குழிகளிலிருந்து இந்த வண்டு வளர்கிறது. எருக்குழிகளில் கடப்பாறையால் குழியெடுத்து, இந்தப் பூஞ்சணத்தை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து ஊற்ற வேண்டும். இந்தப் பூஞ்சணம் வண்டுகள் மற்றும் பூச்சிகளின் தோல் மீது படர்ந்து, வளர்ந்து உள்ளே ஊடுருவிச் செல்லும். பூச்சிகளின் உடம்பில் இருக்கும் திரவத்தை, இந்தப் பூஞ்சணம் மெள்ள மெள்ள உறிஞ்சத் தொடங்கும். இதனால் பூச்சிகள், வண்டுகள் ஒருவித தள்ளாட்டத்துடன் வாழ்ந்து, ஒரு கட்டத்தில் இறந்துவிடும்.
இந்தப் பூஞ்சணம் தானியங்கள், பயறுவகைப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள், பழப்பயிர்கள், பருத்தி போன்றவற்றைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. இதை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் எடுத்துக்கொண்டு, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
மண்ணில் இடுவதாக இருந்தால், ஏக்கருக்கு ஒரு கிலோ மெட்டாரைசியம் பூஞ்சணத்துடன், 50 கிலோ தொழுவுரத்தைக் கலந்து நிலத்தில் தூவலாம். மாதம் ஒருமுறை இந்தப் பூஞ்சணத்தைத் தெளித்துவந்தால், மேலே சொன்ன பெரும்பாலான பூச்சிகள், வண்டுகள் பாதிப்பிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories