நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

 

நாற்றுகளை வயலில் நடும்போது முட்டைக் குவியல்கள் உள்ள இலைகளை கிள்ளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

இனக்கவர்ச்சிப் பொறிகளை நடவு செய்த 10 நாட்களுக்கு பிறகு ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைத்து ஆண் குருத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.

டிரைக்கோடெர்மா என்ற முட்டை ஒட்டுண்ணியை இருமுறை அதாவது நடவு செய்த 30 மற்றும் 37வது நாட்களில் வயலில் வெளியிட வேண்டும்.

வேப்ப எண்ணையை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி கலந்து ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.

வயலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்திகள் ,குளவிகள், நீர் தாண்டி, நீர் மிதப்பேன், தட்டான்கள் போன்ற பூச்சிகள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். இவற்றினால் இயற்கையாகவே குருத்துபூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories