தற்போது அனைவரும் நெல் சாகுபடி செய்துள்ள நிலையில் அவற்றைக் குருத்து புழுக்கள் அதிகம் தாக்க வாய்ப்புள்ளது.
முட்டைக் குவியல்கள் இலைகளில் பழுப்பு நிறத்தில் காணப்படும். வளர்ந்த பூச்சிகள் ஆனது மஞ்சள் நிறத்தில் கூறிய மூக்கு போன்ற அமைப்போடு இலைகளின் முனைகளில் அமர்ந்திருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
நாற்றுகளை வயலில் நடும்போது முட்டை குவியல்கள் உள்ள இலைகளின் நுனிகளைக் கிள்ளி விட்டு நடவு செய்ய வேண்டும். இனக்கவர்ச்சிப் பொறிகளை நடவு செய்த 10 நாட்களுக்கு பிறகுஏக்கருக்கு5 என்ற அளவில் வைத்து ஆண்குருத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும் .டிரைக்கோடெர்மா என்ற முட்டை ஒட்டுண்ணியை இருமுறை அதாவது நடவு நட்ட 30 மற்றும் 37 நாட்களில் வயலில் வெளியிட வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி கலந்து தெளிக்க வேண்டும். வயலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்தி,தரை வண்டுகள், ஒட்டுஉண்ணிகள் குளவிகள், நீர் மிதப்பேன் ,தட்டான் கல் இடுகிவள் பூச்சிகள் ஆகியவற்றை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இவற்றினால் இயற்கையாகவே குரு த்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.