நெற் பயிரைத் துவட்டி எடுக்கும் தண்டு துளைப்பான் நோய்- துவம்சம் செய்ய புதிய வழிகள்!

நெல் பயிரில் தண்டு துளைப்பான் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஏதுவாக விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்பில் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:

1800 ஹெக்டேர் (1800 ha)
நடப்பாண்டு கார் பருவத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நெல் பயிர் 1800 ஹெக்டேரில் பயிரிடப்பட்டு வளர்ச்சி பருவத்தில் உள்ளது. இப்பருவத்தில் பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்டதும் கண்காணித்து உடனடியாக பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு (Integrated crop protection)
மாவட்டத்தின் சில பகுதிகளில் நெல் பயிரில் தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் காணப்படுகிறது. தண்டு துளைப்பான் தாக்குதல் தங்கள் வயல்களிலும் உள்ளதா என்பதை உடனடியாக விவசாயிகள் கண்டறிவதுடன், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேற்கொள்ளுதல் மிக மிக அவசியமாகிறது.

குருத்து காய்தல்
பாதிக்கப்பட்ட பயிர்களின் இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டைக் கூட்டம் காணப்படும். தழைப் பருவத்தில் புழுக்கள் தண்டுகளில் நுழைந்து வளரும் தண்டுகளை உட்கொள்வதால் அதன் நடுப்பகுதி காய்ந்து விடுகிறது. இதுவே குருத்து காய்தல் எனப்படுகிறது.

வெண்கதிர்
நன்கு வளர்ச் சியடைந்த பயிரில் முழு தானியக் கதிர்களும் காய்ந்துவிடும். எஞ்சியிருக்கும் தட்டையான தானியங்களே வெண்கதிர் எனப்படுகிறது. குருத்தைப் பிடித்து இழுக்கும் போது அவை எளிதாக கையோடு வந்துவிடும். பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் வயலில் காணப்படும் இதில்

டிரைக்கோடெர்மா (Trichoderma)
நோயை முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோடெர்மா ஜப்பானிக் கம் ஹெக்டேருக்கு 5 மில்லி லிட்டர் வீதம் இரண்டு முறை நாற்றாங்காலில் தெளிக்க வேண்டும்.

நெருக்கமாக நடக்கூடாது (Do not walk close)
நாற்றுக்களை நெருக்கமாக நடுவதைத் தவிர்க்க வேண்டும். நாற்று நடும்போது நாற்றின் நுனியைக் கிள்ளி விடுவதால் தண்டு துளைப்பானின் முட்டை குவியல் அழிக்கப்படுகிறது எனவே

வேப்பக் கொட்டைச்சாறு (Neem nut juice)
வேப்பக் கொட்டைச்சாறு தெளிப்பதன் மூலம் தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories