முருங்கைக்குஎன்ன மருந்து தெளிக்கலாம்
முருங்கையில் மொட்டுஉருவானவுடன் மூலிகைப் பூச்சி விரட்டி கரைசல் தெளித்து பூச்சி மற்றும் புழு தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.
பீர்க்கங்காய் செடி தலையில் எறும்பு இருக்கிறது. தலை ஓட்டையாக உள்ளது. என்ன மருந்து அடிக்கலாம்.
பெரும் சேதத்தை தடுக்க வேப்பம் புண்ணாக்குடன் வேப்ப எண்ணெய் கலந்து செடிகளுக்கு கை ப்பிடி அளவு வைப்பதினால் எறும்புகளை தடுக்கலாம்.
தேமோர் கரைசல் தயாரிக்கும் முறை
ஒரு லிட்டர் புளித்த மோர் ஒரு லிட்டர் தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேன் விட்டு நிழலான இடத்தில் வைத்து தினமும் கரைசலை அளிக்க வேண்டும். ஏழாவது நாளில் தேமோர் கரைசல் தயாராகிவிடும் இந்த கரைசலை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் கரைசலை கலந்து தெளிக்க வேண்டும்.
நெல்லில் புகையான் விழுந்துள்ளது தடுக்க என்ன வழி
நெல் வயல்களில் அதிக நீர் தேங்கி வடியாமல் உள்ள இடங்களிலும் புகையான் பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படும். இந்த பூச்சிகள் நெற்பயிரின் தண்டுப்பகுதியில் கூட்டமாக அமர்ந்து கொண்டு சாறு உறிஞ்சும் இதனால் நெற்பயிர் முற்றிலுமாக காய்ந்துவிடும் .இந்த புகையை கட்டுப்படுத்த தாவரப் பூச்சிகொல்லிகள் அசாடிராக்டின் 10 லிட்டர் நீரில் 200 மில்லி கலந்து தெளிக்க வேண்டும்.