நெல் சாகுபடி என்றாலே பராமரிப்பு என்பது மிக முக்கியமானது தான்.
அதுவும் பூச்சி தாக்குதலை குறித்த பராமரிப்பு சற்று அதிகம் தான்.
அந்த வகையில் நெல்லை அதிகம் தாக்கக் கூடிய பூச்சி வகைகளில் ஒன்றைக் குறித்து இங்கு காணலாம்.
பிரபா என்பவர் புதிதாக விவசாயம் செய்பவர். அவருக்கு நெல் சாகுபடி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வேறு இருந்தது. அவர் தன்னுடைய நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். அவரது நெற்பயிரில் பூச்சி தாக்குதல் அதிகம் இருந்தது அவர் தன்னுடைய வயலுக்கு அருகில் உள்ள தட்சிணாமூர்த்தி என்ற அனுபவ இயற்கை விவசாயிடம் விவரம் அறியலாம் என்று சென்றிருந்தார்.
பிரபா… அனுபவ விவசாயி சந்திக்கப் போகும்போது பூச்சி தாக்கிய நிலத்தில் உள்ள ஒரு நெல் தூரை பிடுங்கி சென்றிருந்தார் .அவரைக் கண்ட அனுபவ இயற்கை விவசாயி தட்சிணாமூர்த்தி வரவேற்று… என்ன விஷயம் என்று கேட்டார்.
உடனே பிரபா எ பிரச்சனையையும் அது வயலில் உள்ள நெல் [தூர காண்பித்தார்.
அதைக்கண்ட தட்சிணாமூர்த்தி ஓ…………….நாவாய்ப்பூச்சி தாக்கம் இது என்று சொல்லியவாறு நெல்லை கெ டுக்கும் நாவாய்ப்பூச்சி என்றார்.
இதைக் கேட்ட பிரபா மறுபடியும் கூறுமாறு கேட்டார் .அதற்கு அனுபவ விவசாயி நெல் வயலில் வரும் பூச்சித்தாக்குதல் நெல் பயிரில் பூக்கும் பருவத்தில், பால் பிடிக்கும் பருவத்தில் கதிர் நாவாய் பூச்சி தாக்குதல் அதிகம் இருக்கும்.
இந்த பூச்சியின் சிறிய பூச்சிகள் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். காலையிலும் மாலையிலும் இப்பூச்சிகள் அதிகளவில் நெல் மணிகளில் சாற்றை உறிஞ்சும் நெல் மணிகளில் இப் பூச்சியானது வாய் உறுப்பையே செலுத்தியிருந்தால் அப்பகுதி பழுப்பு நிற புள்ளிகளாக மாறிவிடும்.
இந்தத் துளையின் வழியாக அனுப்புவதால் நெல் மணிகளின் நிறம் பாதிப்படைந்து கருமை நிறமாக மாறும். இப்பூச்சியின் தாக்குதல் தீவிரமாகும் போது பாதிக்கப்பட்டவையாக மாறும். மணி உருவான பிறகே பூச்சி தாக்குதலால் நெல் மணி சுருங்கியும் காணப்படும் இதனால்தான் “ நெல்லை கெ டுக்கும் நாவாய்ப்பூச்சி” என்று சொல்வார்கள்.
இதை தடுக்க ஏதாவது வழி உண்டா என்று கேட்டார். அதற்கு அனுபவ இயற்கை விவசாயி தட்சிணாமூர்த்தி இந்த பூச்சியானது மேகமூட்டம் விட்டுவிட்டு வரும் சிறிய அளவிலான மழைக்காலங்களில் மாற்றம் போன்றவற்றால் உற்பத்தியாகிறது .
எனவே நெல் சாகுபடி செய்த காலங்களில் முறையாக பின்பற்றியும் பூச்சி நடமாட்டத்தைக் கருத்தாய் கவனித்து 10 கிலோ பசு மாட்டுச் சாணி சாம்பல் உடன் , 2 கிலோ சுண்ணாம்புத் தூள் மற்றும் ஒரு கிலோ புகையிலை கழிவை கலந்து காலை வேளையில் பயிர் மீது தூவ வேண்டும்.
மற்றொரு முறையாக 100 மில்லி கருவேல் இலை சாற்றுடன்1o கிலோ சாணியுடன் 1o லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் என்றார்.