பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் எப்படி வேண்டுமானாலும் பரவி சேதத்தை ஏற்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது இதை காற்று விதை தானியம் ஆகியவற்றின் மூலமும் மற்ற இடங்களுக்கு பரவுகின்றன அவ்வகையில் தற்போது பயர்களை அதிகம் பாதிப்படைவது பால் ஆர்மிவாரம் எனப்படும் படைப்புழு. இந்த படைப்புழுவை இயற்க்கை முறையில் எப்படி கட்டுப்படுத்தலாம்.
வயலில் ஏதோ ஒரு புழு உள்ளது அதன் தாக்குதல் அதிகமாகிக் கொண்டே போகிறது என்ன செய்வதென்றே தெரியவில்லை அதைப்பற்றி யாரிடமாவது கேட்டு அவற்றை கட்டுப்படுத்தலாம் என நினைக்கிறேன்.
இது எப்படிப்பட்ட படைப்புழு தாக்குதல் என்று பார்க்கலாம்?
பயிர்களில் உள்ளஅறிகுறிகள்தான்… அதாவது படைப்புழுவின் இளம் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டிச் சாப்பிட்டு விடும் இதனால் இலைகள் பச்சையத்தை இழந்து வெண்மையாக காணப்படும். இதில் 3 முதல் ஆறாம் நிலை புழுக்கள் இலைகளுக்குள் சென்று சேதத்தை ஏற்படுத்தும்.
வயல்களில் விளக்குப்பொறி வைத்து பூச்சி நடமாட்டத்தைக் கண்டுபிடித்து பின்னர் இனக்கவர்ச்சிப் பொறி கொண்டு அழித்து விடலாம் தும்பைச் சாறு, நொச்சி சாறு , வேப்பம் சாறு முதலியவற்றை பயிர்களின் குருத்துகளில் தெளித்து கட்டுப்படுத்தலாம் பயிர் சுழற்சி முறையை கையாண்டு படை புழுவை கட்டுப்படுத்தலாம்.
பசு கோமியம் 15 லிட்டர் அடுப்பு சாம்பல் 3 கிலோ வேப்பங்கொட்டை பொடி 3 கிலோ மிளகாய் பொடி அரை கிலோ வசம்பு பொடி 250 கிராம் பெருங்காயப் பொடி 25 கிராம் இஞ்சி 250 கிராம் பூண்டு 250 கிராம் வெங்காயம் அரை கிலோ சோற்றுக்கற்றாழை 5 முதல் 7 மடல் இடித்தது ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பயிர்களின் மீது தெளிக்க வேண்டும்.
இந்த பொடியை எப்படி தயாரிப்பது?
25 கிலோ அடுப்புச் சாம்பல் 25 கிலோ மாட்டுச்சாணம் நிழலில் உலர்த்தி பின் பொடியாக உடைத்தது. மிளகாய் பொடி 2 கிலோ மஞ்சள் பொடி 2 கிலோ வசம்பு பொடி 100 கிராம் பெருங்காயப் பொடி 100 கிராம் வேப்பம் கொட்டை பொடி 20 கிலோ ஆகியவற்றை ஒன்றாக கலந்து காலை வேளையில் பனியின் ஈரம் இருக்கும்போது பயிர்கள் மீது தூவ வேண்டும்.