பயிரை சேதப்படுத்தும் பூச்சிக்கு எதிர் பூச்சிகள்:
பொறி வண்டு, கிரைசோபா, புழு ஒட்டுண்ணி, குளவி வகைகள்
குளவி புழுவை கொட்டியவுடன் புழு மயக்க நிலையில் இருக்கும் அவற்றை தன் கூட்டிற்கு எடுத்துச் செல்லும் அந்த புழுவிற்குள் தன் முட்டையை இடும். அவை கொஞ்சம் கொஞ்சமாக புழுவை சாப்பிடும் இவ்வாறு சாப்பிட்ட உடன் குளவி இனம் கூட்டுபுழுவாக மாறி விடும். (ஒவ்வொரு புழுவிற்கும் 4 பருவம் உண்டு) அதேபோல குளவியின் கூட்டு புழு பருவம் இது. இந்த கூட்டுப்புழு பருவம்தான் நம் பயிரை சேதப்படுத்தும் குளவி புழுவை அழித்து விடும். இவை நம் வயலில் தங்கி இருப்பதற்கு உணவு தேவைப்படும்.
அவை தேனும் மகரந்தமும் இருக்கும் பயிரை சாகுபடி செய்ய வேண்டும். அவை சூரியகாந்தி, மக்காச்சோளம், ஆமணக்கு, சிறிய பூவாக இருக்கனும் வெள்ளை, மஞ்சள் கலராகவும் இருக்கனும் அவை சோம்பு, கடுகு கொத்தமல்லி போன்றவற்றை ஊடுபயிராக வளர்க்கவேணடும். பெரிய பூவாக இருக்கும் (அகலமான பூ) பயிரை நடவுசெய்யக் கூடாது. பருத்திக்கு பச்சைப்புழு அதிகமாக வரும். சூரியகாந்தியில் புழு கவரும் தன்மை இருப்பதால் பருத்திக்கு ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.