இந்த பூச்சியானது மக்காச்சோளம் மட்டுமல்லாமல் நெல் ,கரும்பு, தக்காளி ,வெங்காயம் ,நிலக்கடலை, பருத்தி ,உருளைகிழங்கு, சோயா ,மொச்சை ,முட்டைகோஸ் ,கோதுமை, சிறுதானியங்கள் உள்ளிட்ட 80 வகையான பயிர்களை தாக்கும் தன்மை கொண்டது.
புழு
இந்த புழுவின் தலைப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் இவை குறியீட்டை தலைகீழாக எழுதியது போலவும் மற்றும் வால் பகுதியில் நான்கு புள்ளிகள் சேர்ந்தது சதுரம் போன்ற அமைப்புடனும் காணப்படும். மேலும் உடலின் மேற்புறத்தில் கோடுகள் காணப்படும்.
அந்துப்பூச்சி
அந்து பூச்சின் இறக்கைகள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இறக்கைகளின் நுனியில் மற்றும் மத்திய பகுதிகளில் வெள்ளை நிற புள்ளிகளுடன் முக்கோணத்தை போல காணப்படும்.