கரும்பு நடவு செய்து ஏழு மாதம் ஆகிறது. அதில் து ரு நோய் அளவுக்கு அதிகமாக காணப்படுகிறது. கட்டுப்படுத்த என்ன வழிமுறைகள்?
பாதிக்கப்பட்ட இலைகளை உடனே அகற்றி விட வேண்டும் அதன்பிறகு சுக்கு அஸ்திரம் தெளிக்கலாம்.
வாரம் ஒரு முறை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் சூடோமோனஸ் கலந்து தெளித்து வருவதன் மூலமும் துரு நோய் தாக்குவதை தவிர்க்கலாம்.
இந்த நோயை கட்டுப்படுத்த துரு நோய் எதிர்ப்பு ரகங்களை பயிரிடலாம்.
தக்காளியில் வாடல் நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம். இதன் மூலம் தக்காளியில் வாடல் நோய் கருகலை கட்டுப்படுத்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு சூடோமோனஸ் 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வேர் நன்றாக நனையும்படி தெளிக்கலாம் அல்லது நீர் பாசனத்தில் கலந்து விடலாம்.
வேப்பங்கொட்டை கரைசலை எவ்வாறு தயார் செய்வது அதன் பயன்கள் யாவை?
ஏக்கருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டையை இடித்து ஒரு நாள் நீரில் ஊறவைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் காதி சோப்பு மற்றும் 2oo லிட்டர் தண்ணீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளையில் தெளித்து வர பூச்சிகள் பயிரை அண்டாது.
திறந்தவெளி வீடமைப்பு முறையில் கோழி வளர்ப்பது எப்படி?
இந்த வகை வீடு அமைப்பினை போதுமான அளவு இடவசதி இருந்தால் மட்டுமே அமைக்க முடியும். ஒரு ஹெக்டர் நிலத்தில் 25O கோழிகளை வளர்க்கலாம்.
இந்த நிலத்தில் உள்ள பசுந்தீவனம் கோழிகளுக்கு ஏற்றன தீவன ஆதாரமாக அமைகின்றது. கோழிகளை மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாக்க ஒரு கொட்டகையினை தற்காலிகமான கூரைகளை கொண்டும் சாதாரண மர கம்புகளை கொண்டு அமைக்க வேண்டும்.
கன்று ஈன்ற புதிதில் மாட்டிற்கு என்ன தீவனம் வைக்கலாம்?
கன்று ஈன்ற ஒருவாரத்திற்கு வெதுவெதுப்பான தண்ணீர் வைக்கவும். ராகி கூழ் வைக்கலாம். ஒரு வாரத்திற்குப் பிறகு அடர்தீவனம் கொடுக்கலாம். அதனுடன் புண்ணாக்கு பருத்திக்கொட்டை கொடுக்கலாம். பசுந்தீவனம் உலர்தீவனம் கொடுக்கலாம்.