பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது இவ்வளவு தருவல்களை கவனிக்கணும்.

1.. பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை.

** சானங்களை நீக்கி தொழுவத்தை சுத்தப்படுத்திவிட வேண்டும்

. ** தொழுவத்தை சுத்தப்படுத்த சுத்தமான நீரை உபயோகப்படுத்த வேண்டும்.

** தீவனத் தொட்டிகளிலோ சேமிப்புக் கொட்டிலிலோ எந்த தீவனமும் இல்லாமல் மருந்து தெளிக்கும் முன்பு சுத்தமாக வைக்க வேண்டும்.

** நீர்த் தொட்டிகளில் பாசான் (Algae) வளரும் அளவு வைக்காமல் அவ்வப்போது சுத்தம் செய்தல் வேண்டும்.

** சரியான அளவு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தவும்.

** பால் கறப்பதற்கு முன்பு மருந்துகளைத் தெளித்தல் கூடாது. ஏனெனில் பால் காற்றில் உள்ள விஷத்தன்மையை எளிதில் எடுத்துக் கொள்ளும். எனவே பால் கறந்து முடித்தபின் மருந்து தெளிக்க வேண்டும்.

2.. வழிமுறைகள்:

** முதலில் சானம், சிறுநீர் போன்றவற்றை இரும்பு வடிகால் மூலம் வெளியேற்றிவிட வேண்டும்.

** அதேபோல் தழுவனத் தொட்டி சேமிப்புக் கிடங்களில் இஇருக்கும் தீவனங்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.

** நீர் தொட்டியை ஃபிரஷ் வைத்துச் சுரண்டி சுத்தப்படுத்த வேண்டும்.

** நீர்த் தொட்டிகளுக்கு வாரம் ஒருமுறை சுண்ணாம்புப் பூச்சு பூச வேண்டும்.

** மற்ற தரைகளையும் இதேபோல் சுத்தப் படுத்தி நீர்தெளிக்க வேண்டும்.

** சுவர்களில் படிந்துள்ள சானி, அழுக்குகளை நீக்குதல் வேண்டும்.

** பினால் 2%, சலவை சோடா 4% (கரைசல்) மற்றும் பிளீச்சிங் பவுடர் 30% அளவுள்ள கரைசலைத் தெளிக்க வேண்டும்.

** சூரியவெளிச்சம் நன்கு தெழுவத்தில் விழுமாறு செய்ய வேண்டும்.

** பூச்சிக்கொல்லிகளை சீரான இடைவெளியில் (குறிப்பாக மழைக் காலங்களில்) தெளிக்க வேண்டும்.

** அவ்வப்போது பூச்சிக்கொல்லி கலந்த சுண்ணாம்புக் கரைசலை சுவர்களின் விரிசல் மற்றும் இடுக்குகளில் பூசினால் அங்குள்ள உணி, பேண், போன்றவை நீங்கும்.

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories