விழுப்புரம் மாவட்டம் அரும்பக்கம் கீழணை வட மருதூர் உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சும்மாவா 1500 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு பயிர் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர் இந்தநிலையில் இலைப்பேன் மற்றும் மாவுப்பூச்சி தாக்குதலால் மரவள்ளி கிழங்கு பயிர் கடுமையாக பாதிக்கப்படுகிறது இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலையில் உருவாகியுள்ளது அவர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர் மரவள்ளிக்கிழங்கு பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து அது விவசாயிகள் பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும் அதன்படி பூச்சி தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அழிக்க வேண்டும் இதன்மூலம் பூச்சிகள் அதிகம் வராமல் தடுக்க முடியும் ஆரம்ப நிலையிலேயே கண்காணித்து வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்து அசாடிராக்டின் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி அளவு கலந்து காலை அல்லது மாலை வேளையில் பயிருக்கு தெளிக்க வேண்டும் 10 அல்லது 15 நாட்கள் இடைவெளியில் தயோமீதொக்ஸம் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில்0.5 என்ற அளவில் கலந்து தெளிக்கலாம் அல்லதுஅபமேக்ஸன் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு மில்லி அளவு கலந்து தெளிக்கலாம் இதன்மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும் .
சேலம் மாவட்டத்தில் தனியார் மொத்த சில்லறை விற்பனை கடைகளில் உரம் பூச்சிக்கொல்லி மருந்து விதை உள்ளிட்ட இடுபொருட்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை கிடைக்கும் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களிலும் தேவையான விதை உரம் திரவ உயிர் உரங்கள் முட்டை உரங்கள் போன்ற பொருள்களை வாங்கலாம் யூரியா1156 மெட்ரிக் டன் டிஏபி 2789 பொட்டாசியம் 2768 எஸ் எஸ் பி 963 காம்ப்ளக்ஸ் 9 ஆயிரத்து 948 மெட்ரிக் டன் உரங்கள் தனியார் உரக்கடை வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு உள்ளன எனவே பொதுமக்கள் காலத்திலும் விவசாயிகள் தடையின்றி விவசாய பொருட்களை வாங்கலாம்.