பூச்சிவிரட்டி கரைசல் தயாரிக்கும் முறைகள்……

கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ,பாலுள்ள செடி (எருக்கு இலை) 2 கிலோ,துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ,கொய்யா இலை 1/2 கிலோ,கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ,மேற்க்கண்ட இலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும்.

1/2 கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி தண்ணீரில் கரைத்து மேற்கண்ட கரைசலுடன் சேர்த்து,கரைசலை பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் தொட்டியில் தயாரிக்க வேண்டும். நிழலான இடத்தில் வைக்க வேண்டும்.

மூடி வைக்க வேண்டும். இரண்டு நாள் கழித்து வடிகட்டி1லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் சேர்த்து தாவரங்களின் இலைகளில் தெளிக்க வேண்டும்.

அடர்த்தியான இலைப்பகுதிகளில் இக்கரைசலை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.

5 கிராம் காதி சோப்புக் கரைசலை சேர்த்துக் கொள்ள வேண்டும். 5 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.

இலைகளில் கரைசலில் நாற்றம் இருந்து கொண்டு இருக்கும். எனவே பூச்சிகள் நெருங்காது.

ஒவ்வொரு தடவை தெளிக்கும் போது வேறு மூன்று,நான்கு ரக குலைகளை மேற்கண்டவாறு ஊறப்போட்டு 1லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்துக் சோப்புக் கரைசலையும் சேர்த்து தெளிக்க வேண்டும்.

இவ்விதம் தயார் செய்த பூச்சி விரட்டிக் கரைசலில் மூலம் பெரும்பாலான பூச்சிகளை விரட்டி விடலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories