பூச்சிவிரட்டி தயாரிக்க எந்தெந்த இலைகளை பயன்படுத்தலாம்?

பூச்சிவிரட்டி தயாரிக்க எந்தெந்த இலைகளை பயன்படுத்தலாம்?

கசப்பு சுவையுடன் இருக்கும் வேம்பு சோற்றுக் கற்றாழை குமி ட்டிக்காய் ஆகிய இலைகளையும் ஒடித்தால் பால் வரும் தன்மை கொண்டதாக இருக்கும் காட்டாமணக்கு இலைகளையும் ஆடு மாடு உண்ணாத ஆடாதோடா நொச்சி இலைகளையும் துர்நாற்றம் வீசும் இ லை மற்றும் தழைகளான பீச்சங்கு ஊமத்தை போன்றவைகளையும் பூச்சி விரட்டி தயாரிக்க தேர்வு செய்யலாம்.

தென்னங்கன்று விதை தேங்காய் எப்படி தேர்வு செய்வது?

நன்கு காய்த்து வரும் தாய் மரத்தின் விதையை தேர்வு செய்ய வேண்டும் .தேங்காயை தட்டும் போது சத்தம் கேட்க வேண்டும். விதைத் தேங்காய் 2 கிலோ எடை இருக்க வேண்டும்.

நாட்டுக்கோழி ஒரு வருடத்திற்கு எத்தனை முறை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்?

நாட்டுக்கோழி ஒரு வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

முந்திரி நடவு செய்ய எவ்வளவு இடைவெளி வேண்டும்?

முந்திரி மரக்கன்றுகளுக்கு ஒரு கன்றுக்கும் அதிகபட்சமாக 20 அடி இடைவெளி விடுவதால் கன்றுகள் சிறப்பாக வளரவும் கா ய்ப்பு அதிகரிக்க வழி வகுக்கும்.

அடர் நடவு முறையில் ஏக்கருக்கு 190 மரக்கன்றுகளும் சற்று இடைவெளி விடும் போது 100 முதல் 120 வரை மரக்கன்றுகளும் நடலாம்.

இளம் பருவத்தில் உள்ள சோளப்பயிர் மற்றும் கம்பு நேப்பியர் புல் ஏன் கால்நடைகளுக்கு கொடுக்கக் கூடாது?

இளம் பச்சை சோளப்பயிர் ஹைட்ரஜன் சயனைடு நச்சுப் பொருள் உள்ளது. எனவே இந்த மாடுகள் இறந்து விடும் வாய்ப்பு உள்ளது .எனவே சோளப் பயிரில் பூட்டை வந்த பிறகு கால்நடைகளுக்கு கொடுப்பது நல்லது.

அதேபோல் தீவனத்திற்கு பயன்படும் கம்பு நேப்பியர் புள்ளெலும் ஆஸ்சாக்லேட் அதிகம் இருக்கும் வாய்ப்பு உண்டு. எனவே அதையும் இளம்பருவத்தில் கொடுப்பதை தவிர்க்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories