பூச்சி கட்டுப்பாட்டில் பொறிகளின் பங்கு….

பூச்சி கட்டுப்பாட்டில் பொறிகளின் பங்கு….

வேளாண்மையில் தீமை செய்யும் பூச்சிகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்கு பெரும்பாலும் ரசாயன மருந்துகளை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால், தீமை செய்யும் பூச்சிகளின் நடமாட்டத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது எளிது. அதற்கு பல்வேறு பொறிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

இனக்கவர்ச்சிப் பொறி:

இயற்கையில் பெண் அந்துப்பூச்சிகள் ஒருவித ரசாயனப் பொருளை தன் உடலிலுள்ள சிறப்பு சுரப்பிகளின் வாயிலாக சுரக்கின்றன. அவை காற்றுடன் கலக்கப்பட்டு அந்த இனத்தின் ஆண் அந்துப் பூச்சிகளுக்கு சமிக்கை அளித்து அவற்றை கவர்ந்து இழுத்து இனச்சேர்க்கை புரியும். இவ்வாறான ரசாயன பொருளானது செயற்கையாக ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்டு சிமிழ் போன்ற குப்பிகளில் அடைத்து விற்கப்படுகிறது. இந்த இனக்கவர்ச்சிப் பொறியினை ஏக்கருக்கு 10 – 15 என்ற அளவில் வயலில் ஆங்காங்கே வைத்து விட வேண்டும். இதிலிருந்து வெளிவரும் வாசனைக்கு ஈர்க்கப் படும் ஆண் அந்துப்பூச்சிகளானது, இனக்கவர்ச்சிப் பொறியினுடன் இணைக்கப்பட்டுள்ள பாலிதீன் பைகளில் சேமிக்கப்படும். பின்பு அவைகளை தனியே எடுத்து அழித்துவிடவேண்டும்.

மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டை பொறி:

பூச்சிகளானது பொதுவாக மஞ்சள் நிறத்திற்கு அதிக ஈர்ப்புத்தன்மைக் கொண்டவை. எனவே சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டைப் பொறிகளை ஒரு ஏக்கருக்கு 25 என்ற விகிதத்தில் வைக்க வேண்டும்.

பயிர்களின் வளர்ச்சி உயரத்தை விட உயரமாக இருக்குமாறு குச்சிகளில் பொருத்தி வயலில் ஆங்காங்கே வைத்துவிட வேண்டும். மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டை பொறியில் பூச்சிகள் ஒட்டிக்கொண்டு வெளிவரமால் இறந்துவிடும். இவற்றின் இனப்பெருக்கத்திறன் பாதிக்கப்பட்டு வயலில் பூச்சிகளின் தாக்கம் குறைவாக இருக்கும்.

நன்மைகள்: சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதில்லை. நன்மை செய்யும் பூச்சிகளுக்கு பாதிப்பில்லை.

 

 

 

1) மஞ்சள் நிற ஒட்டும் அட்டை :

அனைத்து காய்கறி பயிர்கள் மற்றும் பழ வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்

2) பழ ஈக்களுக்கான பொறி :

கொய்யா, மா, பலா, மாதுளை போன்ற அனைத்து வகையான பழ பயிர்கள்,

தக்காளி , கத்திரி , வெண்டை , மிளகாய், நெல் , வெங்காயம் போன்ற அனைத்து காய்கறிகள் மற்றும்

முலாம்பழம் , தர்பூசணி , சுரைக்காய் பீர்க்கங்காய் புடலங்காய் பாகக்காய் போன்ற கொடி வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories