பூச்சி நோய்களில் இருந்து நெற்பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது?…

தமிழகம்,புதுச்சேரியில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக நெற்பயிரில் சேதத்தை விளைவிக்கக் கூடிய பூச்சிகளும்,நோய்களும் அதிகரித்துள்ளன. அவற்றை சரியான மருந்துகளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்.

புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் (விழுப்புரம் மற்றும் கடலுர் மாவட்டம்)தற்போது நடைபெறும் சொர்ணவாரி மற்றும் குறுவை பருவங்களில் ஆடுதுறை 37 மற்றும் ஆடுதுறை 43 போன்ற நெல் ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த நெல் ரகங்களில்தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக செஞ்சிலந்தி,குருத்துப்பூச்சி போன்ற பூச்சிகள் தாக்குகின்றன. மேலும் பாக்டீரிய இலை கருகல் நோயும் அதிகமான தாக்குதலை ஏற்படுத்தி உள்ளன. இப்பூச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் விவசாயிகள் நெல் பரியில் அதிக மகசூல் பெற முடியும்.

செஞ்சிலந்தி:

செஞ்சிலத்தி என்பது கொசுவை விட மிகச் சிறிய அளவில் இருக்கும். இது எண்ணிக்கையில் அதிகமாக உருவாகி நெற்பயிரின் இலைச் சோலையின் மேற்பரப்பிடில் அமர்ந்துக் கொண்டு சாற்றை உறிஞ்சும்.இதனால் இலை பச்சையத்தை இழந்து மஞ்சள் நிறமாக மாறும். குறிப்பாக சிகப்பு நிறத்தில் உள்ள செஞ்சிலந்திகள் இலைப் பகுதியில் நடுப்பரப்பில் தாக்குதலை ஏற்படுத்தும். இத்தகைய செஞ்சிலந்திகளை உருப்பெருக்கி வழியாகவே பார்க்க முடியும்.

தடுக்கும் முறைகள்:

தாக்குதல் மத்தியமாக இருப்பின் ஒரு லிட்டர் நீருக்கு 4மிலி என்ற அளவில் டெட்ராடி.பான் 8 இ.சி தாக்குதல் பென்புரோபாத்ரின் 20 இ.சி.தெளிக்க வேண்டும்.

தாக்குதல் அதிகமாக இருப்பின் டைக்கோபால் 18 இ.சி. ஒரு லிட்டர் 2 மிலி அல்லது நனையும் கந்தகத் தூள் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

குருத்துப் பூச்சி:
குருத்துப் பூச்சினுடைய புழுக்கள் இளம் பயிர்களின் நடுத்தண்டினையும் வளர்ந்த பயிர்களின் நடு குருத்துக்களையும் தாக்குவதால் வெண்மை கதிர்கள் உருவாகி நெல் மணிகள் சாவிகளாகவும் பதர்களாகவும் மாறும்.

நிர்வாக முறைகள்:

ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறியை மாலை வேளைகளில் அமைக்க வேண்டும். விளக்குப் பொறியில் 200 வாட்ஸ் குமிழ்பல்பு பொறுத்த வேண்டும். பல்பினை மாலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் எரிய செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 5 இனக் கவர்ச்சிப் பொறி அமைக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 2 சிசி டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணி அட்டையை 12 இடங்களில் கட்ட வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் 3 சத வேப்ப எண்ணையுடன் 100 கிராம் காதி சோப்பு கலந்து நடுத்தண்டு நனையும்படி தெளிக்க வேண்டும்.

தாக்குதல் அதிகமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ பெவேரியா பேசியானா என்ற உயர்ரக பூஞ்சாணக்கொல்லி அல்லது 250 கிராம் பேசிலஸ் துருஞ்சியன்சிஸ் என்ற உயர் ரக பாக்டீரிய கொல்லியை பயன்படுத்தலாம்.

பாக்டீரிய இலைக் கருகல் நோய்:

பாக்டீரியா இலைக் கருகல் நோயானது நெற்பயிரின் இலைச் சோலையின் விளிம்பு ஓரங்களில் மஞ்சள் நிறத்தில் தாக்குதலை ஏற்படுத்தும்.

தடுக்கும் முறைகள்:

நெற்பயிரின் வயலில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

பன்னிரெண்டு மணி நேரம் 100 லிட்டர் தண்ணீல் ஊற வைத்து இருப்பது சத சுத்த பசுஞ்சாணத்திலிருந்து பெறப்பட்ட சுத்த சாண நீரினை ஒரு ஏக்கர் வயலில் இலையின் ஓரங்கள் நனையுமாறு மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.

ஒரு ஏக்கர் 120 கிராம் அக்ரிமைசின் அல்லது பாக்டீரிமைசின் 2000 என்ற ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் டெட்ராசைக்ளின் கூட்டுக் கலவை அல்லது காப்பர் ஆக்சிக்குளோரைடு ஒரு ஏக்கருக்கு 500 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

தாக்குதல் அதிகமாக இருந்தால் கோசைட் என்ற மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார்.

இப்பூச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் விவசாயிகள் நெல் பரியில் அதிக மகசூல் பெற முடியும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories