பூச்சி விரட்டிகள்

அரப்பு இலை அல்லது உசிலை மர இலை 2 கிலோ பறித்துவந்து தேவையான நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். அதிலிருந்து ஐந்து லிட்டர் கரைசலை எடுத்து அதனுடன் ஐந்து லிட்டர் புளித்த மோரை சேர்க்கவேண்டும். இக்கலவையை 7 நாட்கள் வரை நன்கு புளிக்க விட வேண்டும். இதுவே அரப்பு மோர் கரைசல் ஆகும்.

ஒருலிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். கைத்தெளிப்பான் ஒரு பங்கு அளவிற்கு தெளிக்கும்போது ஒரு ஏக்கருக்கு 10 டன் அளவிற்கு தெளிக்க வேண்டும்.

நன்மைகள்

அரப்பு மோர் கரைசல் பயிர்களை வளர்க்கின்றது. பூச்சிகளை விரட்டும் . பூஞ்சாண நோய் தாங்கி வளர்கின்றது. பூ பிடிக்கும் பருவத்தில் செடிகளுக்கு தெளிப்பான் மூலம் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். மேலும் நிறைய பூக்கள் பூக்கும் குறைந்த செலவில் விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள பயிர்களை பாதுகாக்க வேண்டும் .அரப்பு மோர் கரைசல் ஒரு வளர்ச்சி ஊக்கியாக இருப்பதால் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சி தருவதோடு அதிக மகசூல் பெறவும் வழி வகுக்கிறது.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories