மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலின் காரணங்கள்:

உடுமலை பகுதிகளில், மக்காச்சோளத்தில் (Maize) படைப்புழு தாக்குதல் குறித்து, வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உடுமலை பகுதிகளில், தற்போது மக்காச்சோளம் சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படைப்புழு தாக்குதல்
ஒரு சில பகுதிகளில், படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது. இதனையடுத்து, திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மனோகர், வேளாண் பல்கலை பூச்சியியல் துறை பேராசிரியர் சண்முகம், வேளாண் உதவி இயக்குனர் தேவி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், மக்காச்சோளம் சாகுபடி (Maize Cultivation) செய்யபட்டுள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தனர். படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள், பொருளாதார சேதநிலையான, 10 சதவீதத்திற்கு மேல் ஏற்பட்டால் மட்டுமே மருந்து தெளிக்க வேண்டும் என்றார்.

கட்டுப்படுத்த
வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, கடைசி உழவில், ஏக்கருக்கு, 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும் மற்றும்

இதன் வாயிலாக, கூட்டுப்புழுவிலிருந்து, தாய் அந்துப்பூச்சிகள் செயல் இழந்து விடும்; முட்டையிட்டு பல்கி பெருகுவது கட்டுப்படுத்தப்படும்.பெவேரியா பூஞ்சாணவிதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.ஏக்கருக்கு, 5 இனக்கவர்ச்சி பொறிகள், பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ப கட்டி விட வேண்டும்.வரப்புப்பயிராக, உளுந்து, பச்சைபயறு, சோளம் ஆகியவை, 2க்கு, 4 வரிசை நடவு செய்தால், 20 நாள் பயிரை பூச்சி தாக்குதலிலிருந்து காப்பாற்றலாம் இதில்

20 முதல், 30 நாட்களில், அசாடிராக்டன், 1500 பிபிஎம், மருந்து ஏக்கருக்கு, ஒரு லிட்டர், கைத்தெளிப்பான் வாயிலாக, மட்டுமே தெளிக்க வேண்டும்.40 முதல், 45 நாட்கள் பயிருக்கு, மெட்டாரைசியம், ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, பயிரின் குருத்தில் படியுமாறு தெளிக்க வேண்டும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories