மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!

 

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடப்பு காரிப் பருவத்தில் மக்காச்சோளம் பயிரிட விரும்பும் அனைத்து விவசாயிகளும் படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

அதன்படி கோடை மழை பெய்தவுடன் நிலத்தினை ஆழமாக உழவு செய்ய வேண்டும். இதனால் நிலத்தில் உள்ள படைப்புழு மற்றும் இதர புழுக்களின் கூட்டுப்புழுக்கள் மேலே வந்து சூரிய ஒளி படுவதால் அழிக்கப்படுகிறது.

மேலும் பறவைகளுக்கு உணவாகவும் அழிக்கப்படுகிறது. மக்காச்சோள விதைப்புக்கு முன் கடைசி உழவில் ஹெக்டேருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு உழவேண்டும்.

விதைப்புக்கு முன் விதை நேர்த்தி அவசியம். ஒரு கிலோ விதைக்கு ரசாயனம் மருந்தாக இருந்தால் தையோமித்தாக்சான் 30 எப்.எஸ். 10 கிராம் அல்லது உயிரியல் மருந்தாக இருந்தால் பெவெரியா பேசியானா 10 கிராம். இதில் ஏதாவது ஒன்றினை கலந்து விதைக்கலாம்.

10 வரிசைக்கு இடைவெளியில்‌ 75
செ.மீ இடைவெளி விட்டு விதைப்பு செய்ய வேண்டும்‌. இதனால்‌ பூச்சி மருந்து தெளித்தல்‌ மற்றும்‌ இதர பணிகள்‌ செய்திட எளிதாக இருக்கும்‌.

ஒரு ஹெக்டேருக்கு சூரிய
விளக்குபொறி 1 எண்‌ மற்றும்‌
இனக்கவர்ச்சி பொறி 12 எண்கள்‌ வைத்து படைப்புழுவின்‌ அந்து
பூச்சிகளை கண்காணிக்கவும்‌,
கவர்ந்து அழிக்கவும்‌ செய்யலாம்‌.

வரப்பு பயிராக தட்டைப்‌ பயிறு எள்‌, சூரியகாந்தி முதலிய பயிர்களையும்‌,ஊடுபயிராக பாசிப்பயிறு முதலிய
பயிர்களையும்‌ பயிரிட்டு
மக்காச்சோளத்தின்‌ படைப்புழுவின்‌ தாக்குதலை தவிர்க்கலாம்‌.

வளர்ந்த புழுக்களை கட்டுப்படுத்திட உயரிய மருந்தான மெட்டாரைசியம்‌
அனிசோபிலே 8 கிராம்‌ அளவில்‌ ஒரு லிட்டர்‌ தண்ணீர்‌ கலந்து விதைப்பு செய்த 40 நாட்களில்‌ தெளித்து
கட்டுப்படுத்தலாம்‌.

மேற்கண்ட ஒருங்கிணைந்த
வழிமுறைகளை கடைப்பிடித்து
மக்காச்சோளத்தில்‌ படைப்புமு
தாக்குதலை கட்டுப்படுத்தி மகசூல்‌ இழப்பினை தவிர்த்திடலாம்‌.

இந்த தகவலை வேளாண்‌ இணைஇயக்குனர்கள்‌ (பெரம்பலூர்‌), (அரியலூர்‌) ஆகியோர்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌ தெரிவித்துள்ளனர்‌.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories