மாதுளை அதிக பூக்கள் பூத்து காய் வைக்க இயற்கையாக என்ன மருந்து அடிக்கலாம்?

பாகல் கொடியில் இலைப்பேனை கட்டுப்படுத்த இயற்கை வழிகள் யாவை?

பாகல் கொடியில் இலைப்பேன் கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு மற்றும் சோற்றுக்கற்றாழை ஆகிய இரண்டையும் நன்கு இடித்து தூளாக்கி அதை பத்து நாட்களில் நீரில் ஊற வைத்து தெளிக்கலாம்.

மிளகாயில் இலை சுருள் நோய்க்கு என்ன மருந்து அடிக்கலாம்?

நொச்சி, அரளி, வேம்பு ,துளசி மற்றும் எருக்கம் இலைகளை இடித்து அதை வடிகட்டி அந்த சாற்றை தெளிப்பதால் இலை சுருள் நோய் மற்றும் வெள்ளை ஈ தாக்குதல் உடனே சரி செய்யப்படுகிறது மேலும் செடிகள் நன்றாக வளரும்.

வில்வம் இலைச்சாற்றை தெளிப்பதால் இலைச்சுருள் நோய் கட்டுப்படுத்தலாம்.

மாதுளை அதிக பூக்கள் பூத்து காய் வைக்க இயற்கையாக என்ன மருந்து அடிக்கலாம்?

மாதுளையின் ஒவொரு மரத்திற்கும் தொழுவுரம், மண்புழு உரம் போட்டு நன்கு மண் அனைத்து ,தேமோர் கரைசல் தெளித்து விடுவதன் மூலம் அதிக பூக்களை பெறலாம்.

தேங்காய்ப்பால் கடலைப் புண்ணாக்கு கரைசலை பூ பிடிக்கும் தருணத்தில் தெறிப்பதன் மூலம் பூ உதிராமல் அதிக காய் பிடிக்கும்.

மீன் அமிலத்தை வாரத்திற்கு ஒரு முறை தெளிப்பதன் மூலம் பூச்சித்தாக்குதல் குறைந்து அதிக மகசூல் கிடைக்கும்,

வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு என்ன இயற்கை உரம் போடலாம்?

ஒரு ஏக்கருக்கு 50 கிலோ மக்கிய தொழு உரத்துடன் இரண்டு கிலோ சூடோமோனஸ் கலந்து அடியுரமாக போடலாம்.

மாடுகளுக்கு பால் காய்ச்சல் நோய் ஏற்படுவதற்கு காரணம் என்ன?

மா டுகளுக்கு அதிகப்படியான அலைச்சல் , நீண்ட தூரம் வரை கொண்டு செல்வது, திடீரென தீவனம் அளிக்காமல் இருத்தல், ஆக்சலேட் அதிகம் இருக்கும் செடிகளை மா டுகள் மேய்தல் அல்லது பசுந்தானிய தட்டுகளை மேய்தல் போன்ற அயற்சி நிலைகள் மாடுகளுக்கு பால் காய்ச்சல் நோய் ஏற்படக் காரணமாகிறது.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories