இலையின் அடிப்பகுதி கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் வெள்ளையாக மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும்.
சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்.
ஒட்டும் தன்மை கொண்ட திரவத்தை வெளியேற்றும் இவை இலைகள் கருகி விடக்கூடிய தன்மை கொண்டது.
கட்டுப்படுத்தும் முறை
களைகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பூச்சிகள் அதிகம் தாக்கப்பட்ட செடிகளை பூச்சிகள் அதிகம் பரவாமல் இருக்க அகற்றிவிடலாம்.
காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் பொழுது இதன் தாக்குதல் இருக்கும்.
வேப்பங்கொட்டை கரைசல் 5 மில்லி 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம்.
மீன் எண்ணெய் சோப்பினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் அளவில் காதிசோப்புடன் கலந்து தெளிக்கலாம்.