மாவுப்பூச்சிகள் பப்பாளி, மல்பெரி ,மரவள்ளி, பருத்தி ,கொய்யா, கத்திரி ,தக்காளி, செம்பருத்தி ,செவ்வந்தி போன்ற பயிர்களையும் களைச் செடிகளையும் தாக்குகின்றது.
இந்தப் பூச்சி காற்று ,பறவைகள் ,விலங்குகள், தண்ணீர் மற்றும் மனிதர்களால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் பரவக்கூடியது.
கிரானைட் நயன் ரக வாழையை எத்தனை நாட்களில் அறுவடைக்கு வரும்.
கிரானைட் 9 ரகத்தில் முதல் அறுவடை நடவு செய்த 11 மாதங்களுக்குள் மறுதாம்பு அறுவடையில் பத்து மாதங்களிலும் இரண்டாவது மறுதாம்பு நட்ட ஒன்பது மாதங்களிலும் அறுவடைசெய்துவிடலாம். சரியாக பராமரித்தால் 30 மாதங்களில் மூன்று முறை அறுவடை செய்து விடலாம்.