மா மரங்களைத் தாக்கும் கற்றாழைப்பூச்சி- பாதுகாக்க புதிய யுத்திகள்!

தேனியில் மா மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் இனிவரும் காலங்களில் தோன்றும் கற்றாழைப்பூச்சித் தாக்குதலில் இருந்து அவற்றைப் பாதுகாக்க தோட்டக்கலைத்துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கூடலூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கருக்கும் மேல் மா விவசாயம் நடக்கிறது.

மாம்பழ சாகுபடி (Mango cultivation)
குறிப்பாக அல்போன்சா, செந்தூரம், பங்கனபள்ளி, மல்கோவா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வகையைச் சேர்ந்த மரங்களில் தற்போது பூக்கள் பூத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மா மரத்திற்கு பனியுடன் கூடிய பகல் கடும் வெப்பம் உள்ள சீதோஷ்ண நிலை விவசாயத்திற்கு உகந்ததாகும்.தற்போது இதே போன்ற பருவநிலை நிலவுவதால் மரங்களில் அதிகமாக பூ பூத்துக்குலுங்குகின்றன.அந்த நேரத்தில் புழு, கற்றாழைப்பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும்.

தாக்குதலைத் தவிர்க்க யோசனை (Idea to avoid attack)
பூச்சிக் கொல்லியான கியூரா கிரான் 2 மி..லி. யுடன் 1 லிட்டர் தண்ண ர் கலந்து மரத்தில் பூக்கள் விடும் இடத்தில் மெதுவாக தெளிக்க வேண்டும்.

பூ கருகினால் கார்பண்டாசைம் 2 கிராமை 1 லிட்டர் நீருடன் கலந்து பூ மீது தெளிக்க வேண்டும் என்று கூறினார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories