மிளகாயில் காய்ப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்

மிளகாயில் காய்ப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்

  • நமது தமிழகத்தில் நீர்ப்பாசன வசதி உடைய விவசாயிகள் பலரும் மிளகாயில் உயர் மகசூல் தரவல்ல ஹைபிரிட் ரகங்களை தேர்வு செய்து நடவு செய்துள்ளார்கள். இதில் காய்ப் புழுவின் சேதாரம் தென்பட்டால் உரிய பயிர் பாதுகாப்பு முறைகளை அறிந்துகொண்டு செயல்படுதல் நல்லது. குறிப்பாக ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உத்திகள் எல்லாப் பயிருக்கும் ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டு சிபாரிசு செய்யப்படுகிறது
  • மிளகாயில் முக்கிய எதிரியான ஹீலியாதிஸ் எனப்படும் காளிணிப்புழு பல பயிரைத் தாக்கும் திறன் கொண்டது. மிளகாய் சாகுபடி செய்துள்ள பகுதியில் நாய்க்கடுகு களைச்செடிகள் இருப்பின் அதில் இதன் அந்துப்பூச்சிகள் அதிகமாக முட்டை இடுகின்றன. மிளகாய்ச் செடியில் தாய்ப்பூச்சிகள் நுனிக் குருத்துப் பகுதியில் ஒற்றை முட்டையாக 300 முதல் 700 இடங்களில் முட்டையிடுகின்றன. இவற்றை காலைப் பொழுதில் செடியின் நடுக்குருத்துப் பகுதியில் கூர்ந்துநோக்கினால் கண்டுபிடிக்கலாம். சிறிய ஊதா நிற பந்துபோல சிறியதாக காணப்படும். இந்த முட்டைகளில் இருந்து நாலைந்து நாளில் வரும் சிறிய புழுக்கள் நெளிந்து சென்று மலர் மற்றும் சிறிய தக்காளிக்காய்ப் பரப்பில் சேதத்தை உண்டாக்குகிறது. ஒரு பகுதி உடலை வெளியில் நீட்டிக்கொண்டு உள்ளே மிளகாயை சுரண்டி பதம்பார்க்கும். தனது கழிவுகளை மிளகாயிலேயே புழுக்கள் இடுவதால் இந்த மிளகாயின் தன்மையும் கெடுகிறது. மேலும் நுகர்வோருக்கு அறுவெறுப்பும் ஏற்படுகிறது.
  • இளம்பருவ புழுக்கள் நன்கு வேகமாக நகர்ந்துசென்று தனது உணவைத்தேடி உண்ணும். ஒரு லிட்டர் நீருக்கு வேப்பம்பிண்ணாக்கு கரைசல் 10 சதம் பயன்படுத்தித் தெளித்தால் இவை அழியும். மேலும் வேப்பம் இலைச்சாறு, வேப்பம் கொட்டைச்சாறு மற்றும் வேப்பம் எண்ணெளிணி பயன்படுத்தியும் பயிர் பாதுகாப்பு செய்யலாம்.
  • இளம்பருவ புழுக்காள மிக எளிதில் பழுத்து கீழே விழுந்த பிஞ்சில் கறுப்பு நிற திட்டுகளுடன் மேற்புறம் ஓட்டைகள் போட்ட நிலையில் காணலாம். இவற்றையும் செடியில் உள்ள ஓட்டையைப் பிஞ்சிலும் சேதம் காணும்போதே பிடித்து நசுக்கி அழித்தல் மற்றும் இக்காய்களைப் பொறுக்கி கால்நடைக்கு கொடுத்தல் மூலம் நன்கு குறைக்கலாம்.
  • ஹீலியாதிஸ் புழுக்களை கட்டுப்படுத்திட ஒரு எக்டருக்கு 15 முதல் 20 இடங்களில் பறவை தாங்கிகள் அல்லது இருக்கைகள் அமைக்கலாம். இதற்கு 5 அடிக்கு மேல் உள்ள குச்சிகளை ஆங்கில எழுத்து ‘டி’ வடிவத்தில் அல்லது மேற்புறம் கிளைகள் உடைய காய்ந்த குச்சிகள் பயன்படுத்தியும் பூச்சிகளை அழிக்கலாம். இணக்கவர்ச்சி பொறி ஹீலியாதிஸ் காய்ப்புழுவின் தாய்ப்பூச்சிகளைக் கவர்ந்திழுக்க ஒரு எக்டருக்கு 10 என்ற எண்ணிக்கையில் வைத்தல் பூச்சி நடமாட்டத்தையும் கண்காணிக்க உதவும். மாலை நேரத்தில் 6 மணிக்கு பிறகு இருட்டத் துவங்கியதும் 200 வாட்ஸ் மெர்க்குரி பல்புகளை உரிய பாதுகாப்புகளுடன் நிரந்தர விளக்குப்பொறிகளாக ஏக்கருக்கு 1 வீதம் எரிய வைக்கலாம். கீழ்ப்புறம் தட்டில் 4 முதல் 5 துளி நூலான் மருந்து அல்லது மண்ணெண்ணெய் கலந்து வைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கட்டாயம் அழிக்கலாம். தற்போது நவீன சோலார் விளக்குப் பொறிகள் வந்துள்ளன. பேட்டரி விளக்குப் பொறிகள் ஏன் பூச்சிகளை இழுத்துக் கொல்லும் லைட் ட்ராப்களும் வந்துள்ளன. எப்பாடுபட்டாவது நமது தக்காளிப் பயிரைத் தாக்கும் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்திட கடும் நஞ்சுகளைத் தேர்வு செய்யக்கூடாது. தரம் உள்ள மண்புழு உரம் இட்டுப் பயிர் நலமாக வளர உதவிடலாம். ஒருங்கிணைந்த முறையில் பள்ளி மாணவ மாணவியர் அல்லது வேளாண் தொழிலாளர்களைப் பயன்படுத்தி அதிகம் வளர்ந்துள்ள ஹீலியாதிஸ் காய்ப்புழுக்களை நன்கு வளர்ந்த நிலையில் அதாவது தட்டைப் பயறு காய் அளவை விட (பருமன்) பெரியதாக உள்ள நிலையில் ‘ஒருமித்தசேகரிப்பு’ செய்து அப்புறப்படுத்துவதுதான் சிறந்தது. அந்த நிலையில் எந்த மருந்து தெளித்தாலும் ஏன் பலவித மருந்துகளைக் கலந்து தெளித்தாலும் காசு விரயம் தான் நேரிடும் என்ற விவரம் பலருக்கும் தெரியும். அதிக டோஸ் தெளித்தல் கூடாது என்பதன் முக்கிய தேவையே தக்காளி சாப்பிடும் பொருள் என்பதால்தான். இயற்கை விவசாய உத்திகளால் பலவித இலைக் கரைசல்கள் தயாரித்து அதாவது காசு செலவு ஏதுமின்றி பயன்படுத்தலாம். வேப்பம் இலைக்கரைசல் நன்கு இடித்த 10 கிலோ வேப்பிலையை அரைத்து 20 லிட்டர் நீரில் கலந்து மண்பானையில் 3 நாட்கள் ஊறவைத்து 15 லிட்டர் கரைசலை 100 கிராம் காதி சோப்பு அல்லது சர்ப் தூள் சிறிது கலந்து தெளிக்கலாம். வேப்பம் விதைகளை ஓடு நீக்கி எடுத்து, இடித்து பயன்படுத்தலாம்
  • (5 கிலோ விதைக்கு 20 லிட்டர் நீர் என்ற அளவு). இதனை மேற்கூறியபடி மண்பானையில் ஊறவைத்தும் அல்லது ஒரு சாக்கில் கட்டி ஊறவைத்து அதில் 15 லிட்டர் கரைசல் அளவுக்கு 100 கிராம் காதி சோப்பு வீதம் கலந்து தெளிக்கலாம். வேப்பம்பிண்ணாக்கு தூள் செய்து இதே போல 10 கிலோ எடுத்து வைத்து ஊறவைத்தும் பயன்படுத்தலாம். தாவரக் கரைசல்கள் சிறந்த பூச்சி விரட்டியாகப் பயன்படுகின்றன.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories