முந்திரி சாகுபடியில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதியில் உள்ள குரவப்புலம், தேத்தாகுடி தெற்கு, தேத்தாகுடி வடக்கு, தாமரை புலம், நாலுவேதபதி உள்ளிட்ட கிராமங்களில் முந்திரி சாகுபடி (Cashew cultivation) செய்யப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள முந்திரி மரங்களில் பூச்சி தாக்குதலால் பூக்கள் கருகி வருகின்றன. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மரங்களை வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட முந்திரி மரங்களை தோட்டக்கலை துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் என்றார்.

பூச்சி தாக்குதல்
வேதாரண்யம் பகுதியில் 900 எக்டேரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பனிப்பொழிவு (Snow fall) மற்றும் தேயிலை கொசு என்ற பூச்சி தாக்குதலால் பூக்கள் கருக தொடங்கி உள்ளன. பொதுவாக இந்த தேயிலை கொசுவானது, கோடைகாலங்களில் அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தும், ஆண்டு முழுவதும் தாக்கம் ஏற்படுத்தாது. வேதாரண்யம் பகுதியில் உள்ள முந்திரி, முருங்கை, கொய்யா, வேம்பு ஆகியவற்றில் தேயிலை கொசு தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது மற்றும்,

கட்டுப்படுத்தும் முறை
முந்திரியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை இயற்கை முறையில் கட்டுப்படுத்த பிவேரியா பேசியானா என்ற பூஞ்சாணத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 3 கிராம் என்ற அளவில் கலந்து, இலை வழியாக தெளிக்க வேண்டும். செயற்கை முறையில் கட்டுப்படுத்த தழைக்கும் பருவத்தில் பிரப்பனோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லியும், பூக்கும் பருவத்தில் குளோரிபைரிபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி மூலம் இலை வழி தெளிப்பான் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories