மூலிகைப் பூச்சி விரட்டி

 

மூலிகைப் பூச்சிவிரட்டி என்பது பயர்களில் காணப்படும் பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தும் ஒரு இயற்கை உரமாகும் இது பூச்சிகள் செடிகளின் அருகில் அண்டவிடாமல் துரத்த பயன்படுகிறது. இதற்கு வெளியில் மலை பகுதிகளிலும் வளர்ந்துள்ள மூலிகைகளில் நொச்சி இலை ,சங்குப்பூ இலை, எருக்கம் பூ இலை ,சோற்றுக்கற்றாழை இலை ,வேப்பம் இலை, கருவேலம் இலை, புங்க மர இலை, கருவேலம் இலை, அரளிப்பூ இலைகள் மற்றும் விதைகள் காட்டாமணக்கு இலைகள் ஊமத்தையின் இலைகள் மற்றும் காய்கள் சீத்தாப்பழ இலைகள் மற்றும் காய்கள் பப்பாளி இலைகள் உண்ணிச் செடி இலைகள், விளாம்பழம் இலைகள் பிரண்டையின் அனைத்து பாகங்களும், மஞ்சள்தூள், தும்பைச் செடி ,காக்கா செடி, காட்டு புகையிலை இவற்றுக்குள் குறைந்தபட்சம் 10கிலோதாவரப் பொருட்களில் இருந்து 0. 500 கிலோ சதவீதம் எடுத்துக்கொண்டு 20 லிட்டர் கோமியம் மற்றும் இரண்டு கிலோ பசுஞ்சாணம் ஆகியவற்றைக் கலந்து ஒரு பிளாஸ்டிக் கொள்கலனில் அரைக்க வேண்டும், ஒரு நாளைக்கு 2 முறை வீதம் கலக்க வேண்டும் ,இவை பத்து முதல் பதினைந்து நாட்களில் நொதித்தல் முறையில் தயாராகி விடும்.

இதனை தயாரிக்க மற்றொரு முறை உள்ளது .அதற்கு குறைந்தது 10 தாவரங்கள் பொருட்கள் 15 லிட்டர் தண்ணீர் கலந்து மண்பானையில்கொதிக்க வைக்க வேண்டும் .இதுகுறித்து அடைந்ததும் 2 கிலோ மஞ்சள் தூள் சேர்த்து 12 மணி நேரம் வைக்க வேண்டும் .இதில் 5 லிட்டர் எடுத்து 200 லிட்டர் நீரில் கரைத்து இலைவழி தெளிப்பு செய்தால் போதும் பூச்சிகள் பயிர்களை அண்டாது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories