வாழைப் பயிரைத் தாக்கும் வெட்டுப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்

வாழைப் பயிரைத் தாக்கும் வெட்டுப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்

  1. பயிர் சேதத்தின் அறிகுறி
    பூச்சியின் விவரம்
    கட்டுப்படுத்தும் முறை

அறிமுகம்

குளிர்கால பருவத்தில் வாழைப் பயிரை தாக்கும் வெட்டுப்புழுக்களை கட்டுப்படுத்த விவசாயிகள் வாழை பயிர் மேலாண்மை முறையை கடைப்பிடிக்க வேண்டும்.

பயிர் சேதத்தின் அறிகுறி

இளம்புழுக்கள், இலைக்கு அடியில் இருந்து கொண்டு சுரண்டித் தின்னும். பின்னர், இரவு நேரங்களில் இலைகளை அதிகமாக உண்ணும்.

பூச்சியின் விவரம்

புழுக்கள் இளம்பச்சை (அ) பழுப்பு நிறத்திலும், கருமையான நிறத்திலும் காணப்படும். பூச்சியின் முன்னிறக்கை பழுப்பு நிறத்தில் தோன்றும். அதனுள் அலை போன்ற வெள்ளை கோடுகள் தோன்றும். பின்னிறக்கை வெள்ளை நிறத்திலும், ஓரத்தில் பழுப்பு நிறக்கோடுகளுடனும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை

கையில் எடுத்து புழுக்களை அழிக்க வேண்டும். தாக்கப்பட்ட பகுதிகளை, அழித்துவிட வேண்டும். கோடை உழவு செய்து கூட்டுப்புழுக்களை அழிக்க வேண்டும். விளக்குப்பொறி அமைத்து அந்துப் பூச்சியைக் கவர்ந்தும் அழிக்கலாம்.

இதேபோல், குளோர்பைரிபாஸ் 2 மில்லி லிட்டர் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு), டைகுளோரவாஸ்-76 2 மில்லி, டைபுளுபெச்சுரான்-25 ஒரு கிலோ லிட்டர் (ஒரு லிட்டருக்கு) பூச்சி மருந்துகளை தெளிக்கலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories