வாழையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஆர்.வி.எஸ்., பத்மாவதி தோட்டக்கலை கல்லுாரி மாணவிகள், லட்சுமிபுரத்தில் வாழையில் (Banana) ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் பண்ணைப்பள்ளி உருவாக்கம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கத்துடன் விளக்கினர். வேளாண் கல்லூரி மாணவர்களின் இந்த செயல் விளக்கப் பயிற்சி, அனைத்து விவசாயிகளுக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் தோட்டக்கலை அலுவலர் பாண்டியன், உதவி அலுவலர்கள் பாலமுருகன், விவேகானந்தன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். கிராம தங்கல் திட்டத்தின் கீழ் மாணவிகள் சுபலட்சுமி மனிஷா, ஷாலினி, திவ்யா, சங்கரி பங்கேற்றனர் இதில்

சிப்பி காளான் வளர்ப்பு:
பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மாணவிகள் கவி அபிஷ்மா, வைதேகி, ஆர்த்தி, சுவாதி, தாரணி, வினிஷா, சிரியாராஜ் ஆகியோர் தோட்டக்கலை (Hirticulture) அனுபவம் குறித்த பயிற்சியை கிராம விவசாயிகளுக்கு அளித்தனர். இதில் குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் சிப்பி காளான் வளர்ப்பு மற்றும் கூடுதல் வருவாய் (Extra Income) ஈட்டுவது குறித்து விளக்கினர். ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு மாணவிகள் அளித்த இந்த பயிற்சியின் மூலம், இனி கூடுதல் வருவாய் ஈட்டும் நோக்கத்தில் செயல்படுவார்கள்.

விழிப்புணர்வு:
வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறவும், நோய்க்கட்டுப்பாட்டைத் தவிர்க்கவும் பல்வேறு பயிற்சிகளை (Training) செயல் விளக்கத்துடன் அளித்து வருகின்றனர். விவசாயிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பயிற்சி பெறுகின்றனர். நோய்க்கட்டுப்பாடு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கூடுதல் வருமானம் பெறும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories