விவசாயத்திற்கு பூச்சிகள் நன்மையா? தீமையா?

விவசாயத்தில் பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நன்மை செய்யும் பூச்சிகளும் மற்றும் சுற்றுப்புற சூழல் மாசுபடுகிறது.அப்படிப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளில் உள்ள தீமைகள் குறித்து இங்கு காணலாம்.

பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது, தீமை செய்யும் பூச்சிகளை அழிப்பதற்காக தான் .ஆனால் அதில் நன்மை செய்யும் பூச்சிகள் உள்ளன. சிலந்தி, குளவி, பொறிவண்டு, தட்டான் எனவே ஏராளமான பூச்சிகளும் பாதிக்கப்படுகின்றன.

தீமை செய்யும் பூச்சிகள் பயிர்களை தின்று இலைகளின் அடியில் சுருண்டு கொண்டு அவற்றில் தங்கி பாதுகாப்பாக இருக்கும் .நன்மை செய்யும் பூச்சிகள்தான் வெளியிலேயே பறந்துகொண்டிருக்கும். அதனால் பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிப்பதால் நன்மை செய்யும் பூச்சிகள் மட்டுமே பாதிக்கப்படுகின்றன.

அப்படிப்பட்ட மருந்துகளை தெளித்து விளைவிக்கப்படும் பொருட்களை மனிதர்களும் கால்நடைகளும் பெருமளவில் உண்கின்றனர். இதனால் பலவித நோய்களுக்கு நாம் ஆளாகின்றோம். அதாவது பெயர் தெரியாத நோய்கள் கூட நம்மை பாதிக்கின்றன .மேலும் தீமை செய்யும் பூச்சிகளும் அந்த மருந்துகளின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு தன்னுடைய எதிர்ப்புத் திறனை அதிகரித்து கொள்கின்றது.

தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க நம்மை நன்மை செய்யும் பூச்சிகளை போதும் நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றை நம் வயலுக்குள் எப்படி வரவழைப்பது என்பதனை மட்டுமே.

பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இருந்தால் தானாகவே நன்மை செய்யும் பூச்சிகள் பாதுகாக்கப்படும். பயிர்களின் இலைகளில் கசப்புத் தன்மையை உருவாக்கலாம் இதற்கு கசப்புத் தன்மையுள்ள இயற்கை கரைசலை பயிர்களில் தெளிக்கலாம் .இதனால் பூச்சிகள் பயிர்களின் இலையை சேதப்படுத்தாது.

ஊடுபயிர் மூலமாகவும் இந்த தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். அதாவது ஆமணக்கு போன்ற செடிகளை வரப்புகளில் நட்டு வைப்பதன் மூலம் தீமை செய்யும் பூச்சிகளை வயலுக்குள் வரவிடாமல் பாதுகாக்கலாம். இவ்வாறு பூச்சிகளை கட்டுப்படுத்துவது செயற்கை உரங்களுக்கு பயன்படுத்தும் செலவுகளை குறைப்பதோடு சுற்றுச்சூழல் மாசடைவதும், மண்ணையும் மாசுபடாமல் பாதுகாக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories