வீட்டில் செய்ய கூடிய இயற்கை பூச்சி மேலாண்மை

வீட்டுத் தோட்டத்தில் பூச்சி வந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். அதிகச் செலவில்லாமல் இயற்கை முறையில் நாமே பூச்சி விரட்டியைத் தயாரிக்கலாம் என்கிறார் .

வீட்டில் பெரிய அளவில் காய்கறித் தோட்டம் இருப்பவர்களுக்கு இந்த முறை நன்கு உதவும்.

இயற்கை பூச்சி விரட்டியைத் தயாரிப்பதற்கு மூன்றிலிருந்து ஐந்து வகை ஆடு தின்னாத இலைதழைகள் அல்லது கிள்ளினால் பால் வரும் இலைதழைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக அத்தி, பப்பாளி, வாதமடக்கி, ஆவாரை, வரிக்குமட்டி, நுணா (மஞ்சணத்தி) ஆகிய இலைகளை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு இலையிலும் தலா 1 கிலோ அல்லது தேவைக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

நொச்சிஇலை

இந்த இலைகளுடன் கோமியம் 10 லிட்டர். சாணம் ஒரு கைப்பிடி எடுத்துக்கொள்ள வேண்டும். மேற்கண்டவற்றை முதலில் சேகரித்துக்கொள்ளவும். இப்போது பூச்சி விரட்டித் தயாரிக்கும் முறையைப் பார்ப்போம்:

இலைதழைகளை நறுக்கிக் கோமியம், சாணக் கரைசலில் 15 நாட்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
ஊற வைத்த கலவையை 16-வது நாளில் வடிகட்டவும்.
இதைப் பூச்சி, பூஞ்சைகளை விரட்டும் வகையில் பயிர்கள் மீது தெளிக்க வேண்டும்.
இந்தப் பூச்சி விரட்டியின் அடர்த்தியான கரைசலை அப்படியே தெளிக்கக் கூடாது. ஒரு லிட்டர் பூச்சி விரட்டியை 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம் என்றார் .
நன்றி: பினாங்கு பயனீட்டாளர் சங்க ‘இயற்கை வேளாண்மை’ வழிகாட்டி

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories