வெட்டுக்கிளித் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பாற்றும் வழிமுறை!

சோளம் போன்ற தீவனப்பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கி (Locust Attack) நாசம் செய்து வருகின்றன. எனவே அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சில டிப்ஸ் (Tips).

சாகுபடி செய்துள்ள வயலைச் சுற்றிலும் புல், களைச்செடிகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

வெட்டுக்கிளிகள் பெரும்பாலும் முட்டைகளை வரப்புகளில் இடுவதால் வரப்புப் பகுதியை 5 செ.மீ. ஆழத்திற்கு மண்வெட்டியால் செதுக்கி விட வேண்டும் என்றார்.

மூங்கில் குச்சிகள் அல்லது பிற மரக்குச்சிகளை கொண்டு பறவை தாங்கிகள் செய்து ஒரு ஏக்கருக்கு 20 என்ற எண்ணிக்கையில் வயலில் ஆங்காங்கே நடுவது நல்லது எனவே,

இதனால் பறவைகள், இந்த பறவை தாங்கியின் மீது அமர்ந்து வெட்டுக்கிளிகளை இரை யாக்கிக் கொள்ளும்.

விவசாயிகள் வீட்டில் வளர்க்கும் கோழி, வாத்துகளை, வயலில் விட்டால் வெட்டுக்கிளிகளை அவை இரையாக்கிக் கொள்ளும்.

இரவில் ஒரு ஏக்கருக்கு 1 விளக்கு பொறி வீதம் வைத்து வெட்டுக்கிளிகளை கவர்ந்திழுக்கும் அழிக்கலாம்.

விளக்கு பொறி அமைப்பதற்கு, 60 அல்லது 100 வாட்ஸ் குண்டு பல்பு எடுத்து மூங்கில் குச்சியை கொண்டு பயிர்களுக்கு மேல் எரியும் படி கட்டிக் கொள்ள வேண்டும் என்றார்.

இதன் பின்பு, அகன்ற வாளி அல்லது கொப்பரையில் 10 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதனுடன் மண்ணெண்ணெய் கலந்து வைக்க வேண்டும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பாத்திரத்தில் விழுந்துள்ள வெட்டுக் கிளிகளை சேகரித்து அதை அழிக்க வேண்டும்.

தற்சமயம் வெட்டுக்கிளிகள் சோளம் உள்ளிட்ட தீவனப்பயிர்களைத் தாக்கி வருவதால் சோளத் தட்டு மீது வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்து (அசாடிராக்டின் வேப்பெண்ணெய்) 2 மில்லி என்றளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்கலாம்.

வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தப் பிறகு நாட்கள் கழித்து, சோளத்தட்டைகளை கால்நடைகளுக்கு தீவனம் கொடுக்க வேண்டும்.

பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தப் பிறகு 60 நாட்கள் கழித்து சோளத்தட்டைகளை கால் நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories