வெட்டுக்கிளியின் தாக்குதலை தடுக்கும் கரைசல் இதுதான்!

சப்போட்டா சாகுபடிக்கு ஏற்ற மண் வகைகள் யாவை?

சப்போட்டா பயிர் அனைத்து வகை மண்ணிலும் செழித்து வளரக் கூடியது நல்ல வடிகால் வசதியான மண் ஏற்றது ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது.

சப்போர்ட ஓரளவு உப்புத் தன்மையுள்ள நிலங்களிலும் உப்புத்தன்மை கொண்ட நீரையும் தாங்கி வளரக் கூடியது.

மாதுளையில் உள்ள பழ வண்டு தாக்குதலை எவ்வாறு சரி செய்யலாம்?

வேப்ப எண்ணெய் 3% அடர்த்தியில் 15 நாட்கள் இடைவெளியில் தாய் பட்டாம்பூச்சியும் வயல்வெளியில் தென்படும் போது தெளிக்கவேண்டும்.

மேலும் 200 லிட்டர் தண்ணீரில் 500 கிராம் டிரைகோடெர்மா விரிடி சூடோமோனஸ் கலந்து தெளிக்கலாம்.

இந்த மாதிரியான முறைகளை கையாண்டாலும் மாதுளையில் உள்ள பழ வண்டு தாக்குதலை தடுத்துவிடலாம்.

வயலில் உள்ள வெட்டுக்கிளியின் தாக்குதலை எவ்வாறு தடுக்கலாம்?

தசகாவ்யா கரைசலை தெளிப்பதால் வெட்டுக்கிளியின் தாக்குதலை தடுக்கலாம்.

மேலும் வேம்பு புங்கன் கரைசல் தெளிப்புநீர் பூச்சிகளின் தாக்குதலை குறைத்து நல்ல முறையில் செடிகளை பராமரிக்கலாம்.

செதில் பூச்சியின் தாக்கத்தை எவ்வாறு குறைக்கலாம்?
வேப்ப எண்ணையை 5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும் மேலும் இந்த பூச்சிகளை அழிக்க இதை உணவாக உட்கொள்ளும் ஒருவகை புள்ளி வண்டுகள் விட்டு கட்டுப்படுத்தலாம்.

நாவல் மர வளர்ப்பிற்கு ஏற்ற மண் வகைகள் யாவை?

நாவல் மரம் அனைத்து மண்ணிலும் வளரும் எனினும் அதை உற்பத்தி திறன் மற்றும் தரமான வளர்ச்சிக்கு களிமண் அல்லது நன்கு வடிகால் வசதியுள்ள மண் தேவை.

போதுமான ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்கிறது இதனால் வளர்ச்சி நன்றாக இருப்பதோடு அதிக பழங்களையும் அளிக்கிறது.

நாவலின் உப்புத்தன்மை மற்றும் தண்ணீர் தேங்கிய நிலையிலும் நன்றாக வளரும் எனினும் அடர்ந்த அல்லது இலகுவான மணல் பரப்பிலும் நாவல் மரம் வளர்ப்பது லாபகரமாக இருக்காது.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories